Friday, September 05, 2014
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. மதுரையில் செனாய் நகரில் உள்ள இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கவுன்சிலிங்கில் 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரி. இவருக்கும், வேல்முருகன் என்பவருக்கும் இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பாண்டீஸ்வரி இன்று கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு இருந்தார்.
திருமண நாளிலேயே கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு இருந்ததால் பாண்டீஸ்வரி–வேல்முருகன் திருமணம் காலையில் நடந்தது. திருமணம் முடிந்த உடனேயே மணக்கோலத்தில் பாண்டீஸ்வரி தனது கணவருடன் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார்.
இதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற தல்லாகுளத்தைச் சேர்ந்த கார்த்திகாவுக்கும் இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி கார்த்திகா– முத்துகிருஷ்ணன் திருமணம் பூங்கா முருகன் கோவிலில் நடந்தது. பின்னர் அவர்கள் மணக்கோலத்தில் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
0 comments:
Post a Comment