Friday, September 12, 2014
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி புதுத்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரிண்டிங் நிறுவனம் ஒன்று செயல் பட்டு வருகிறது. இந்த பிரிண்டிங் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள இரண்டு சோலார் தளத்திற்கு அனுப்பப்படுகிறது. பின்னர் அந்த கழிவுநீர் ஆவியாக்கப்பட்டு கழிவுகள் அகற்றப்படுகிறது. இந்நிலையில், இந்த பிரிண்டிங் நிறுவனத்திலி ருந்து வெளியேறும் கழிவு நீர், சோலார் தளம் மட்டுமின்றி, நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஒரு பெரிய குழியில் தேங்கி நிற்பதாக புகார் எழுந்துள்ளது. நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள குழியில் நீண்ட நாட்களாக சாயம் கலந்த கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர் மாசுபட்டு நிறம் மாறி உள்ளதாகவும், உடல் உபாதை கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பிரிண்டிங் நிறுவனத்தை நேற்று காலை திடீ ரென முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வீரபாண்டி இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்ஐ அப்துல்நிகார் தலைமையில் போலீ சார் மற்றும் 53வது வார்டு கவுன்சிலர் சிவா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று முற்றுகை யில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திருப்பூர் மாவட்ட வடக்கு உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் தலைமை யில், அதிகாரிகள் புகார் கூறப்பட்ட பிரிண் டிங் நிறுவனத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில், பிரிண்டிங் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறைகேடாக ஒரு குழியில் தேங்கி இருந்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திருப்பூர் மாவட்ட வடக்கு உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், பிரிண்டிங் நிறுவனத்தில் இருந்த பிரிண்டிங் இயந்திரத்துக்கு சீல் வைத்தார். மேலும், அங்கு தேங்கியிருந்த கழிவுநீரை ஆய்வு செய்து, அதை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றி, அங்கிருக்கும் கழிவுகளை அப்புறப்படுத்தி குழியை மூட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, பிரிண்டிங் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
0 comments:
Post a Comment