Friday, September 05, 2014
மதுரை டி.பி.ரோடு அரசரடி ரெயில்வே கிரவுண்டு எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் 37 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் கிடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு இன்று காலை தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது உடலில் பல்வேறு இடங்களில் குத்து காயங்களுடன் வாலிபர் பிணம் கிடந்தது தெரிய வந்தது. பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்த ராமுத்தேவரின் மகன் முருகன் (வயது37) என தெரியவந்தது.
கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த இவருக்கு 2 மகள் உள்ளனர். முருகனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து தனித்தனியாக வசித்து வந்தனர்.
தனியாக வசித்து வந்த முருகன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் முருகனை ஒரு ‘மர்ம’ கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தி வேறு எங்கேயோ வைத்து கொலை செய்துவிட்டு பிணத்தை பஸ் நிறுத்தத்தில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது.
இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. பெண்ணுடன் கள்ளத் தொடர்பு விவகாரமா? அல்லது தொழில் போட்டியா? முன்விரோதம் காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 3–க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment