Wednesday, October 01, 2014
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் ஜாமீன் மீதான விசாரணையை வழக்கமாக மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி விடுமுறை கால நீதிபதி ரத்னகலா உத்தரவிட்டுள்ளார்.
இதனால், இந்த வழக்கு, அக்டோபர் 7 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காலை 10.30 மணியளவில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிபதி ரத்னகலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா சார்பாக வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானார்.
அரசுத் தரப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்கிறீர்களா என நீதிபதி கேட்டதும், தான் தயாராக இருப்பதாக பவானி சிங் தெரிவித்தார். ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
உடனடியாக நீதிபதி, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருப்பதால், இதனை விடுமுறைக் கால நீதிபதியான, தான் விசாரிக்க முடியாது என்றும் வழக்கமாக மேல் முறையீடுகளை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றுவதாகவும் உத்தரவிட்டார்.
கர்நாடக நீதிமன்றங்கள் தசரா விடுமுறையில் இருப்பதால், விடுமுறை முடிந்து அக்டோபர் 7ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், "கர்நாடக உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே, வழக்கை கேட்காமலேயே ஒத்திவைத்தது இதுதான் முதல் முறை. தலைமை நீதிபதி தலையிட்டு, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
0 comments:
Post a Comment