Thursday, December 04, 2014
திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 285 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3–ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருந்தொழுவு ஊராட்சி கரட்டுப்புதூர் அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. அங்குள்ள மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசியதாவது:–
தமிழக முதல்–அமைச்சரின் சட்டப்பேரவை விதி எண்.110–ன் கீழ் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான விடுதியுடன் கூடிய தொழில் பயிற்சி மையத்தை நமது மாவட்டத்தில் அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 285 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடப்பு ஆண்டில் மொத்தம் ரூ.2 கோடியே ஆயிரம் மதிப்பில் 1,733 பேருக்கு மாதம் ரூ.1000 வீதம் பராமரிப்பு தொகையும், ரூ.8 லட்சம் மதிப்பில் 265 பேருக்கு கல்வி உதவித்தொகையும், ரூ.2 லட்சம் மதிப்பில் 20 பேருக்கு வங்கிக்கடன் மானியமும் வழங்கப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களான நவீன செயற்கை கால் மற்றும் செயற்கை கை, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலி கருவி, காதுக்கு பின் பொருத்தும் நவீன காதொலி கருவி, ஊன்றுகோல், காலிபர் ஆகியவையும், பார்வையற்றவர்களுக்கு ஒளிரும் ஊன்றுகோல், கருப்புக்கண்ணாடி, பேசும் கைக்கடிகாரம், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உறுப்பெருக்கி மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் சிவாச்சலம், ஜெய்ஸ்ரீராம் கல்வி நிறுவனர் தங்கராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...

0 comments:
Post a Comment