Thursday, December 04, 2014
திருப்பூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தொடர்பான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல், திருப்பூர் சார் டாக்டர் கே.செந்தில்ராஜ் திட்ட இயக்குனர் (பொறுப்பு) ரூபன்சங்கர்ராஜ், துணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு) சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசியதாவது:–
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் பறவை காய்ச்சல் நோயினால் எந்த வித பறவைகளுக்கும் உயிரிழப்பும் ஏற்படவில்லை. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம், தாலுகா, ஊராட்சி அளவில் இந்த நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் சின்னாறு பகுதியில் கேரள மாநில எல்லை உள்ளது. அந்த பகுதியில் வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்வதற்கும், இந்த நோய் குறித்து கண்டறிவதற்கும் காவல்துறை, சிறப்பு நோய் தடுப்புக் குழு ஆகியவற்றால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களுக்கு மருந்து தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தங்கள் பண்ணைகளை சுற்றிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கோழிப்பண்ணைகளை அந்தந்த பகுதியை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் பார்வையிட்டு கிருமி நாசினி மருந்து போன்றவற்றை தெளிக்க ஏற்பாடு செய்து இந்த நோய் வராமல் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கோழிகளை 70 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் சூடு செய்து இறைச்சியை உட்கொள்ள வேண்டும்.
இந்த நோய் தடுப்பு பணிக்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒவ்வொரு குழுக்கள் என அதிவிரைவு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் அறிகுறியான கொண்டை கருகுதல், சளி வடிதல், ரத்தக் கட்டு, தீவனம் எடுக்காமலிருத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
கூட்டத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கார்த்திகை ரத்தினம், அனைத்து தாசில்தார்கள், கோழி உற்பத்தி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...

0 comments:
Post a Comment