Friday, December 12, 2014
பின்னல் புக் டிரஸ்ட் - பாரதி புத்தகாலயம் இணைந்து திருப்பூரில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகின்றன. திருப்பூர் மக்களின் பண்பாட்டுத் திருவிழாவாக இது தடம் பதித்துள்ளது. இதன்படி 12வது ஆண்டாக 2015 சனவரி 30 முதல் பிப்ரவரி 8ம் தேதி முடிய பத்து நாட்கள் இந்த புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டிசென்டரில் இந்த புத்தகக் கண்காட்சிக்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ட்ரிபிள்எக்ஸ் குப்புசாமி தலைமை வகித்தார். பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் எஸ்.சுப்பிரமணியம் வரவேற்றார். புத்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் ஆர்.ஈஸ்வரன், பொருளாளர் அ.நிசார் அகமது ஆகியோர் விளக்கினர்.
இதைத் தொடர்ந்து புதிய வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. வரவேற்புக்குழுத் தலைவர் - ஆர்.ஏ.ஜெயபால், செயலாளர் - செ.முத்துக்கண்ணன், பொருளாளர் - அ.நிசார் அகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இத்துடன் 29 பேர் துணைத் தலைவர்களாகவும், 32 பேர் உதவிச் செயலாளர்களாகவும், இவர்களுடன் 132 பேர் கொண்ட வரவேற்புக்குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த விழாவில் முந்தைய புத்தகக் கண்காட்சிகளின் தலைவர்களாக செயல்பட்ட அரிமா எம்.ஜீவானந்தம், எம்பரர் பொன்னுசாமி, லிங்க்ஸ் சௌகத் அலி, பிரிண்டிங் குமாரசாமி மற்றும் திருப்பூர் தமிழ்ச்சங்கம் தலைவர் டாக்டர் ஆ.முருகநாதன், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் வி.டி.சுப்பிரமணியம், ஜெய்ஸ்ரீராம் கல்விநிறுவனங்களின் தாளாளர் தங்கராஜ், யுனிவர்சல் கல்விநிறுவனத் தாளாளர் எஸ்.ராஜகோபால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக செ.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
TRIVANDRUM ACTIVITIES CBOA Trivandrum Region today donated 40 bottles of sanitizers and 1500 masks to Trivandrum District City ...
-
திருச்சி டெல்லியில் பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
-
ரி லீஸ் சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும் கத்தி படத்தின் டீஸர், பாடல்கள் எப்போது ரிலீசாகும் என்பது தான் விஜய் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
கர்நாடக உயர் நீதிமன்றம்| கோப்புப் படம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலம...
-
திருப்பூர் செட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி இடத்தில் தெற்கு வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதை கைவிட்டு, மாற்று இடத்தில் கட்ட வேண்டு...
-
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் கடந்த ஜூன் 11–ம் தேதி தாளவாடி முகமது இலியாஸ் (25) என்பவர் சிறுத்தையால் கொல்லப்பட்டார். மேலும...

0 comments:
Post a Comment