Wednesday, January 14, 2015
எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சகிப்புத்தன்மையற்ற மதவெறி சக்திகளை கண்டித்து திருப்பூரில் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
திருப்பூர் குமரன் சிலை முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார். இதில் படைப்பாளிகளின் சுதந்திரத்திற்கு மிரட்டல் விடுக்கும் மதவெறி சக்திகளை எதிர்த்தும், எழுத்து, கருத்துச் சுதந்திரத்தை முடக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பதோடு, படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வலியறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன், மாவட்டத் துணைத் தலைவர் செ.நடேசன், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கலை இலக்கிய பேரவை பொதுச் செயலாளர் வி.டி.சுப்பிரமணியம், கவிஞர் மகுடேஸ்வரன், ஆசிரியர் சிவகாமி, இளஞாயிறு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
0 comments:
Post a Comment