Tuesday, February 03, 2015
திருப்பூர் மாவட்ட காவல்துறையும், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் இணைந்து நடத்தும் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு 5 நாள் கிரிக்கெட் போட்டி நாளை பல்லடம் புரொபஷனல் கல்லூரியில் துவங்குகிறது.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறை-பொதுமக்களி டையே நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக, மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் காவல்துறை பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள்- 2015 நாளை 03.02.2015 முதல் 07.02.2015 வரை தொடந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் பல்லடம் புரொபஷனல் கல்லூரி மற்றும் உடுமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதனங்களில் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, அவினாசி மஹாராஜா பொறியியல் கல்லூரி, பல்லடம் பார்க் கல்லூரி, புரொபஷனல் கல்லூரி, ஸ்கேட் கல்லூரி, ஏஞ்சல் கல்லூரி, ஜெய் ஸ்ரீ ராம் கல்லூரி, ஏ. ஜி கலை கல்லூரி, உடுமலை அரசு கலை & அறிவியல் கல்லூரி, வித்யசாகர் கல்லூரி, தாராபுரம் மஹாராணி பாலிடெக்னிக் கல்லூரி, பிஷப் த்ரோப் கலை & அறிவியல் கல்லூரி, காங்கயம் ஈ.பி.ஈ.டி குழும பயிலகம், ஊத்துக்குளி ராமநாதன் பொறியல் கல்லூரி, சசூரி பொறியல் கல்லூரி மற்றும் வெள்ளகோவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 15 கல்லூரிகள் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பான அணியும் கலந்து கொள்கின்றன.
முதல் போட்டி பல்லடம் புரொபஷனல் கல்லூரியில் நாளை 3ம் தேதியன்று துவங்கிறது.இந்நிகழ் ச்சியில் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் ஆயுஷ்மணி திவாரி,திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் கழகத்தின் தலைவர் சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங் துவக்கி வைக்கிறார். மேற்கண்டவாறு மாவட்ட காவல்துறை அனுப்ப்பியுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
0 comments:
Post a Comment