Saturday, March 28, 2015
கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக மாணவர்களிடம் பணம் வசூலிப்பதாக, தனியார் பள்ளி மீது முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்-ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களுக்காக மாணவர்கள் தலா ரூ.1,000 நன்கொடை தர வேண்டுமென பள்ளி நிர்வாகம் சார்பில் கேட்டதாகத் தெரிகிறது. இதன்படி, நன்கொடை செலுத்தாததால் 4-ஆம் வகுப்பு படித்து வரும் திருப்பூர் கோல்டன் நகரைச் சேர்ந்த குமரேசன் என்பவரது மகன் அபினவ், வியாழக்கிழமை நடைபெற்ற ஆங்கிலத் தேர்வை எழுத அனுமதி மறுக்கப்பட்டதாம்.
இதனால், ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர் சிலர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகனிடம் இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை முறையிட்டனர்.
அப்போது அவர்கள் அளித்த மனுவில், "ஏற்கெனவே அப்பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக ரூ.1,000 செலுத்தக் கூறினர். அந்தத் தொகையைச் செலுத்த முடியாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுக்கின்றனர். இதுதொடர்பாக உரிய பதிலையும் பள்ளி நிர்வாகம் தெரிவிப்பதில்லை. இந்தப் பிரச்னையில் கல்வித் துறை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், இப் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment