Thursday, March 26, 2015
தமிழக பட்ஜெட்டுக்கு திருப்பூர் தொழில்துறையினர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் கூறியது:
தமிழக நிதிநிலை அறிக்கை அனைத்துத் தரப்பினரும் வரவேற்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 365 கோடி ஒதுக்கீடு, கைத்தறி, நெசவுத் தொழிலுக்கு ரூ. 449 கோடி ஒதுக்கீடு, நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், தமிழகத்திலுள்ள அûனைத்து மாநகராட்சிகளையும் சிறப்பு நகர்ப்புற திட்டத்தில் சேர்க்க நிதி, தொழில் துறை புதிய திட்டங்களுக்காக ரூ.17,314 கோடி, நதிநீர் இணைப்புக்கு நிதி ஒதுக்கீடு, சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்துக்கு ரூ.5,300 கோடி ஒதுக்கீடு போன்றவை வரவேற்கத்தக்கதாகும் என்றார்.
ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் கூறியது:
தமிழகத்திலுள்ள 12 மாநகராட்சிகளையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்ப்பதற்கான திட்டத்துக்கு தமிழக அரசு ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது உயர்தர வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்கான மிக வேகமான முடிவாகும்.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக ரூ. 365.91 கோடி ஒதுக்கீடு, இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும் தொழில் துறை வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக அமையும்.
எதிர்கால மின் தேவையைக் கருத்தில் கொண்டு மின் உற்பத்தித் திட்டங்களுக்காக ரூ. 13,586 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும், சாலை விரிவாக்கம், மேம்பாட்டுக்காக ரூ. 8,228 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கதாகும். திருப்பூரின் நீண்டநாளைய கோரிக்கையான திருப்பூர் - தூத்துக்குடி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.
ஏற்றுமதி, உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியது: மத்திய அரசு நிதிநிலை அறிக்கையைப் போன்றே தமிழக நிதிநிலை அறிக்கையிலும் திருப்பூர் பின்னலாடை தொழில் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. நீண்ட கால கோரிக்கையான, திருப்பூருக்கென தனியாக மின் நிலையம், தொழிலாளர் தங்கும் விடுதிகள், இஎஸ்ஐ மருத்துவமனை, சாலை, சுகாதார மேம்பாடு போன்றவற்றுக்கு
நிதி ஒதுக்கீடு செய்யாதது வருத்தமளிக்கிறது. வேலைவாய்ப்பு பெருகிவரும் நிலையில் திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு தனி முக்கியத்துவம் அளித்து மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) திருப்பூர் மாவட்டத் தலைவர் எம்.வேலுச்சாமி கூறியது: தொழில் துறை வளர்ச்சிக்கு உகந்ததாக தமிழக பட்ஜெட் விளங்குகிறது. புதிய தொழில்முனைவோர்களுக்கு ஒற்றைச்சாரள அடிப்படையில் தேவையான உரிமங்கள் அளிப்பது, தொழிலாளர் திறன் மேம்பாட்டுக்கு ரூ.150 கோடி ஒதுக்கியிருப்பது, சூரிய மின் சக்தித் திட்டத்தை மக்கள் இயக்கமாக செயல்படுத்துவதாக அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியதாகும்.
எனினும், திருப்பூர் தொழில் நகரின் பல்வேறு தேவைகள் பட்ஜெட்டில் இடம் பெறாதது வருத்தமளிக்கிறது என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
0 comments:
Post a Comment