Friday, April 10, 2015
ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் நீக்கினால்தான், இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என வல்லரசு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காகத்தான் அணுசக்தி திட்டங்களை செயல்படுத்துவதாக ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின. மேலும், ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன.
இது தவிர, மேற்கத்திய நாடுகள் ஈரானின் அணுசக்தி உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நீண்ட காலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக கடந்த 2ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் ஈரான் அதிபர் ஹஸன் ரௌஹானி நேற்று தொலைக்காட்சி ஒன்றிற்கு ஆற்றிய உரையில், ‘‘ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் அகற்றினால்தான் அணு ஆயுத விவகாரத்தில் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவோம்” என்று கூறியுள்ளார்.
இந்த திடீர் நிபந்தனையால், மேற்கத்திய நாடுகள் தங்களது பொருளாதார தடைகளை விலக்கிக் கொண்டு இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமா அல்லது ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட போகின்றனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment