Friday, April 10, 2015
உடுமலை நகரில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் ஆண்டு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் தி.சேஷாசலம் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ரா.செல்வராஜ் வரவேற்றார். செயலாளர் கே.ஆறுமுகம் அறிக்கை சமர்ப்பித்தார்.
இதில், உடுமலையில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இத்திட்டத்தை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். சார்- கருவூல அலுவலகத்தில் ஓய்வூதியர்களுக்கு காத்திருப்பு அறை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014-இல் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சி.எம்.வேலுச்சாமி, மு.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிர்வாகிகள் கே.கே.அன்பழகன், எஸ்.ரகோத்தமன், கே.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொ ண்டனர். ஆர்.சுகுமார் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment