Sunday, May 03, 2015
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நூல் திருடப்பட்ட வழக்கில் அனுப்பர்பாளையம் போலீஸார் இருவரை சனிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் காலேஜ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகர் (41). பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர். இவரின் நிறுவனத்தில் வேலூர் பள்ளி கொண்டான் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (எ) கமலக்கண்ணன் மேலாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு தனது நிறுவனத்தில் நடைபெற்ற வரவு செலவு குறித்து கணக்கை ஞானசேகர் சரிபார்த்துள்ளார்.
அப்போது, பனியன் நூல் இருப்பில் 5 ஆயிரத்து 300 கிலோ குறைந்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நிறுவன மேலாளர் ஆறுமுகத்தை கேட்டபோது, அவருக்கு இந்தத் திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ 12 லட்சம். இதுகுறித்து ஞானசேகர் கொடுத்த புகாரின்பேரில், அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பனியன் நிறுவன மேலாளர் கமலக்கண்ணன் (38), உதவியாளர் மேட்டூர் தர்மலிங்கம் (33) ஆகியோரை கைது செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
.jpg)
0 comments:
Post a Comment