Sunday, May 03, 2015
பல்லடம் வட்டாரத்தில் ஆட்டுக் குட்டிகளுக்கு ரத்தக் கழிச்சல் நோய் வராமல் தடுப்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பல்லடம், சுல்தான்பேட்டை பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்ததாக ஆடு வளர்ப்புத் தொழில் உள்ளது. இந்நிலையில் ரத்தக் கழிச்சல் நோய் பாதிப்பில் இருந்து ஆட்டுக் குட்டிகளைக் காப்பது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பல்லடம் அரசு கால்நடை மருந்தக மருத்துவர் நடராஜன் கூறியது:
ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதி, சூரிய ஒளி படும்படியாக இருக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகள் பிறப்பதற்கு 10 நாள்களுக்கு முன்பே, கொட்டகையின் தரைப் பகுதியை நான்கு அங்குலம் ஆழத்துக்குத் தோண்டி, பழைய மண்ணை அப்புறப்படுத்தி விட்டு, அதில் சரளை அல்லது பெருமணலை பரப்பி, சுண்ணாம்புத் தூளை தூவ வேண்டும். கொட்டகைக்குள் இருக்கும் தண்ணீர்த் தொட்டியை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
தரைப் பகுதி அதிக ஈரமில்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான குட்டிகளை அடைக்கக் கூடாது. சுவர்களுக்கு சுண்ணாம்பு பூச வேண்டும். அதிக ஈரப்பதமின்றி, சிறிது உலர்ந்த தீவனங்களையே குட்டிகளுக்கு அளிக்க வேண்டும். குட்டி ஈன்றதும், தாயின் மடியை தண்ணீரால் கழுவிய பிறகே குட்டிகளை பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். குட்டிகளை, தாயுடன் முதல் மூன்று நாள்களுக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும். பிறகு, பால் குடிக்க மட்டும் அனுமதித்து, குட்டிகளை தனியே அடைக்க வேண்டும் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment