Sunday, May 03, 2015
கோத்தகிரி: கோடை சீசனையொட்டி, ஆண்டு தோறும் தோட்டக்கலைதுறை சார்பில் ஊட்டியில் மலர்கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு துவக்க நிகழ்ச்சியாக 8வது காய்கறி கண்காட்சி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நேரு பூங்காவில் நேற்று காலை துவங்கியது. கண்காட்சியில் கோவை, மதுரை, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்ட தோட்டக்கலை துறையின் சார்பிலும், தனியார் சார்பிலும் மொத்தம் 21 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட தோட்டக்கலை சார்பில் பூசணி, முள்ளங்கி, கேரட் ஆகியவற்றைக்கொண்டு திருமலைநாயக்கர் மஹால், கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் 40 கிலோ சேனை கிழங்கால் டிராகன், நெல்லை மாவட்டம் சார்பில் 50 கிலோ வெள்ளை பூசணியால் மயில் உருவம் அமைத்து உள்ளனர்.
இதே போல பாகற்காயால் முதலை, 10 கிலோ பச்சை மிளகாயால் சேவல் அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் சார்பில் 75 கிலோ முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் வாழை மரங்களால் பாரதமாதா உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 450 கிலோ பலவண்ண குடைமிளகாய்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டர் கண்காட்சியில் தனிஇடம் பிடித்துள்ளது. கண்காட்சியை காண காலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பல்வேறு வகையான காய்கறி அலங்காரங்களை பார்த்து வியந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment