Friday, December 18, 2015
கடந்த 4 நாட்களாக மழை இல்லாமல் இருந்த தூத்துக்குடியில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. இன்று காலை முதல் தூத்துக்குடி , முள்ளக்காடு, முத்தையாபுரம், புதுக்கோட்டை, மாப்பிள்ளையூரணி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் தெப்பகுளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுபோல் காய்கனி மார்க்கெட், பிரையண்ட் நகர் காவலர் குடியிருப்பு பகுதி போன்ற, அண்ணா நகர், திரேஸ்புரம், பூபால்ராயர்புரம் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியபடி பயணிக்கின்றன. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறதுதூத்துக்குடியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், மீண்டும் கனமழை பெய்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், 18.12.2015 மற்றும் 19.12.2015 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாள கன மழை பெய்வதற்கான (Isolated Heavy Rainfall) வாய்ப்புகள் இருக்குமென்று தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு அவ்வாறு கனமழை பெய்து வெள்ளம் சூழக்கூடிய நேரங்களில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள் தங்களது அருகில் உள்ள வரவேற்பு மையங்களை பயன்படுத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவசர காலங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 ஐ பயன்படுத்தி தகவல் தெரிவிக்கவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது26). இவரது மனைவி பானுபிரியா(25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வே...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...
0 comments:
Post a Comment