Saturday, December 05, 2015
தூத்துக்குடி மாவட்டம் வீரநாயக்கன்தட்டு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் 220 நபர்களுக்கு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் இன்று (5.12.2015) உணவு வழங்கினார். மேலும் அவர்களுக்கு தலா 5 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் 12வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குழந்தைகளுக்கு பால், வயதானவர்களுக்கு ரொட்டி போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளவர்கள் வீடு திரும்பும் வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு வழங்கப்படும் என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.பி.மோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்செல்வராஜன, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்ற...
-
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி மடத்துக்குளம் பகுதியில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அதன்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– இலங்கை அகதி ஊஞ்சலூர் அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதில் வசித்து வந்தவர்...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
கவுந்தப்பாடி அருகே ஆழ்துளை கிணறு குழாய் அடைப்பை சரிசெய்தபோது தலையில் கம்பிகுத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். தொழிலாளி கவுந்தப்பாடி அர...

0 comments:
Post a Comment