Saturday, January 02, 2016
திருச்செந்தூர் சபாபதிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). என்ஜினீயரான இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறைக்கு வந்த கோவிந்தராஜ் தனது மனைவி சரண்யாதேவியுடன் நாசரேத்தை அடுத்த உடையார்குளம் கிராமத்தில் உள்ள தனது நண்பர் ஜோசப் வீட்டிற்கு புத்தாண்டு கொண்டாடுவதற்காக வந்தார்.
நேற்று மாலை கோவிந்தராஜூம், ஜோசப்பும் அந்த பகுதியில் உள்ள அய்யனார்குளத்திற்கு குளிப்பதற்கு சென்றனர். குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது கோவிந்தராஜ் திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவருக்கு நீச்சல் தெரியாததால் அவரால் வெளியில் வரமுடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் மூச்சு திணறி இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாசரேத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கோவிந்தராஜ் உடல் மீட்கப்பட்டது. கோவிந்தராஜிக்கும், சரண்யாதேவிக்கும் திருமணமாகி ஒரு வருடமே ஆகிறது.
இந்த சம்பவம் குறித்து நாசரேத் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
#திருச்சி_அண்ணாநகர் #கஞ்சா_செடிகள்_அழிப்பு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ராயல் சித்திக் அவர்களின் பெரும் முயற்சியால் தி...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
உடுமலை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் அரிமா சங்க தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. முக...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
0 comments:
Post a Comment