Tuesday, May 17, 2016
காங்கயம் அருகே வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தபோது, முதன்மை வாக்குச் சாவடி அலுவலருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடுமலை அருகே, கரட்டுமடம் ஜி.கே.என். அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் செல்வராஜ் (54). அவர், காங்கயம் தொகுதி, வடசின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காங்கயம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியின் முதன்மை வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, காலை 11.30 மணி அளவில் ஆசிரியர் செல்வராஜுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள், உடனடியாக அவரை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவிச் சிகிச்சைக்குப் பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் செல்வராஜ் உயிரிழந்தார். அதையடுத்து அவரது சடலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.
இத்தகவல் அறிந்ததும் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் என்.ராஜன், துணைத் தேர்தல் அலுவலர் கே.ராஜகோபால் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து ஊதியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாக்குப் பதிவின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு, முதன்மை வாக்குச் சாவடி அலுவலர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்வராஜுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு மகள் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...

0 comments:
Post a Comment