Monday, August 29, 2016
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மாகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் சட்டக்கூலி ரூ203-ஐ வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று (29-9-2016) காலை 11 மணியளவில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தாலுக்கா வி.தொ.ச.தலைவர் ஆர்.மணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வி.தொ.ச.தலைவர் எஸ்.லோகநாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு விவசாய சங்க தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இப்போராட்டத்தில் வி.தொ.ச. தாலுக்கா செயலாளர் க.பிரகாஷ், துணைத்தலைவர் ராமசாமி, சிஐடியு நிர்வாகிகள் பன்னீர்செலவம், வி.கே.பழனிசாமி உட்பட 40 பெண்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர். (இணைப்பு: போட்டோ)
கோரிக்கைகள்;
-மாகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் சட்டக்கூலி ரூ203-ஐ வழங்க வேண்டும். சம்பளம் வழங்க காலதாமதம் செய்ய கூடாது. 100 நாள் வேலையை 85 நாளாக குறைக்காதே! 150 நாளாக உயர்த்திடுக!
-ஊத்துக்குளி தாலூக்கவில் முதியோர், விதவை, ஊனமுற்றோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களை பரீசிலித்து உத்திரவுகள் வழங்க வேண்டும். உதவி தொகை நிறுத்தியோர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும்.
-ஊத்துக்குளி தாலூக்கவில் புதிய குடும்ப அட்டை கேட்டு 2013 ஆண்டு முதல் விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் குடும்ப அட்டை வழங்கப்படவில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. பெறப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பங்களுக்கும் உடனடியாக குடும்ப அட்டை வழங்க வேண்டும்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
0 comments:
Post a Comment