Tuesday, March 20, 2018
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குடி போலீசார் விசாரணை.
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆலந்துறை. இவர் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தனுசு கோபி (14) இவர் திருவெறும்பூரில் உள்ள முக்குலத்தூர் மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். இந்நிலையில் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் துவாக்குடி போலீசில் தனது மகன் காணவில்லை என புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று மாலை தனுசு கோபியின் சைக்கிள் துரை குவாரி அருகே நிற்பதாக நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தனுசு கோபியின் பெற்றோர், உறவினர் குவாரியை சுற்றி தேடினர். தனுசு கோபி சுமார் 200 அடி பள்ளத்தில் உடலில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததை பார்த்த பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து சிறுவன் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டனா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...

0 comments:
Post a Comment