Tuesday, March 24, 2020
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 24
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் கரொனா பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. பிரதமரும், முதல்வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியில் வர வேண்டாம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் கடந்த மூன்று நாட்களாக 75 வயதாகும் என்னை திருச்சி கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் அலைக்கழித்து வருகின்றனர். இதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் தான் பொறுப்பு. புனித ஜோசப் கல்லூரி நிலப் பிரச்சினை தொடர்பாக விவசாயிகள் சார்பில் சென்ற என்னை இவ்வாறு அலைக்கிறார்கள். அந்த இடத்தில் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் திருடு போயுள்ளது. அதை பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறையினர் புகார் கொடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து என் மீது வழக்குப் பதிவு செய்ய அழுத்தம் வருவதாக பொய் செய்திகளை பரப்புகின்றனர். காவல்துறை அதிகாரிகளின் கடந்த பத்து நாட்கள் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டும். யாரிடமிருந்து அழுத்தம் வருகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கையின் போது என்னை மூன்று நாட்கள் காவல்நிலையத்தில் காக்க வைத்துள்ளனர். இதனால் எனக்கு கரொனா தாக்கி இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...

0 comments:
Post a Comment