Thursday, February 11, 2021
திருச்சி அப்போலோ மருத்துவமனை நரம்பியல் சிகிச்சையில் சாதனை
54 வயதுடையவர் படுக்கையில் மீண்டு எழுந்த சாதனை
திருச்சி, கடந்த நவம்பர் மாத இறுதி வாரத்தில் 54 வயது இளங்கோவன் இடதுக் கால் செயலிழப்புடன் நடக்க முடியாத நிலையில் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய வலதுக் கால் ஏற்கனவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேற்படி கலந்தாய்வில் அவருக்கு இடதுக் காலில் ஒரு வித இறுக்கமும் மிதமான பலவீனமும் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. அதோடு அவருக்கு இரு தோள்களிலும் வலியும் பலவீனமும் இருந்திருக்கிறது. ஒரே காலை மட்டும் பயன்படுத்தி உடலின் எடையை சுமந்து நடப்பதால் ஏற்பத்திருக்கும் தொய்வு என்பதாக அதனை அவர் எடுத்துக்கொண்டு சிகிச்சை பெறாமல் இருந்து வந்திருக்கிறார். இப்போது திடீரென நடக்க முடியாத அளவிற்கு சிக்கல் வந்ததும் மருத்துமனை அனுமதிப்பின் போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோமோ என்ற பதட்டத்துடன் இருந்தார். ஏனெனில் அவர் ஏற்கனவே இருதய தொந்தரவுகளுக்கும் சர்க்கரை - இரத்தக் கொதிப்பு நோய்களுக்கும் சிகிச்சை பெற்று வருபவர்.
அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதும் அவர் மூளை - தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு அவருக்கு கழுத்து தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நோயாளி சிறுநீர் கழிக்கும் சக்தியை இழந்திருப்பதும் அந்நேரத்தில் தெரியவந்தது - கிட்டத்தட்ட 1300 மில்லி சிறுநீர் நீர்ப்பையில் இருந்தும் அவர் அதனை உணர முடியாத நிலையில் இருந்தார். அவருக்கு கழுத்து தண்டுவடத்தை சுற்றியிருக்கும் தசைநார்கள் கெட்டியாகும் தடிமனாகவும் ஆகி அதுவே ஒரு எலும்பைப் போல துருத்திக்கொண்டு தண்டுவடத்தை மிக மோசமாக நசுக்கிக்கொண்டிருப்பதாக தெரிய வந்தது. அப்படியாக நசுங்கியிருப்பதை விடுவிக்காவிடின் அவர் மிகுந்த மோசமான நிலைக்கு செல்லக்கூடிய சாத்தியங்கள் (பூரண வாதம் மூச்சுத்திணறல் சிறுநீர் மலம் கழிக்க முடியாத நிலை) அவருக்கு தெளிவாக விளக்கிக்கூறப்பட்டன.
அறுவை சிகிச்சையின் போது அவருக்கு அழுத்தம் ஏற்பட்டிருந்த இரண்டு கழுத்துத் தண்டுவட எலும்புகள் அகற்றப்பட்டு தண்டுவட நரம்பு மண்டலைத்தை நசுக்கிக்கொண்டிருந்த கெட்டியான தசை நார்கள் அதீத நுணுக்கத்துடன் கரைத்து அகற்றப்பட்டன. முடிவில் டைட்டானியம் சாதன உதவியுடன் அவ்வெலும்புகள் இணைக்கப்பட்டு திடமாக்கப்பட்டன. திருச்சி அப்போலோ மருத்துவமனையின் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மயிலன் சின்னப்பன் மற்றும் கெவின் ஜோசப் இந்தக் கடினமான சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றினார்கள். சிகிச்சையின் சிறு பிசகு கூட நோயாளிக்கு மிக மோசமான பாதகத்தை அளிக்கக்கூடும் என்ற நிலையில் மிகுந்த துல்லியத்துடன் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் கிடைக்கப்பெறும் உயர் சிகிச்சைகளை நமது திருச்சியிலே கிடைக்க வழிவகுக்கிறது என அப்போலோ மருத்துவமனை மண்டல தலைமை அதிகாரி மருத்துவர் ரோகினி ஸ்ரீதர் தெரிவித்தார். மருத்துவமனை பொதுமேலாளர் சாமுவேல், சிவம் மற்றும் துணைப்பொதுமேலாளர் சங்கீத் ஆகியோர் உடன் இருந்தனர்.
டாக்டர். சிவம், நிலைய மருத்துவ அதிகாரி, மணிகண்டன் - பொது மேலாளர் விற்பனை பிரிவு, டாக்டர்.ரோகினி ஸ்ரீதர் மண்டல தலைமை அதிகாரி, டாக்டர் கார்த்திக் மயக்கவியல் மருத்துவ நிபுணர், பேஷண்ட் இளங்கோவன் 54 வயது, டாக்டர். மயிலன் சின்னப்பன், மூளை மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் கேவின் ஜோசப் மூளை மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர், சாமுவேல் - பொது மேலாளர் அப்போலோ மருத்துவமனை, திருச்சி ஆகியோர் உடன் இருந்தனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...

0 comments:
Post a Comment