Friday, February 28, 2020

On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில்  கனரா வங்கி அதிகாரிகள் சங்க  பொதுச் செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டார்.


முன்னதாக அவர்  திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வங்கி அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அரசு அளிக்கும் ஊதிய உயர்வுக்கு எங்களுக்கு சம்மதம் இல்லை. அதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அடுத்தகட்டமாக மார்ச் மாதத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் 'ஏ' கிரேடு அதிகாரிகளுக்கு இணையான ஊதியம் வங்கி அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். இது தொடர்பாக நாளை ஐபிஏ சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதற்காக அனைத்து வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள், வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடத்தும் ஐபிஏ.க்கு பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே அதிகாரம் உள்ளது. ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அதிகாரம் இல்லை  என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சூழ்நிலையில் ஐபிஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பேச்சுவார்த்தை எவ்வாறு முடிகிறது என்பதை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.
On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
தமிழகத்தில் கொள்ளையடித்த பணத்தை துபாய் மற்றும்  பல நாடுகளுக்கு  பணப்பரிவர்த்தனை  செய்ய  நூதன திட்டம்  மத்திய புலனாய்வு நடவடிக்கை எடுக்குமா

தமிழகத்தில் இருந்து 450 எல்பின் குடும்பத்தினர் துபாய் பயணம் அப்படி பயணம் செய்ய IATA முறையான அங்கீகாரம் பெற்றுள்ளதா


(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது )


திருச்சி மன்னார்புரதில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் எல்பின் நிதி நிறுவனம். இந்நிறுவனத்தின் மீது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் எல்பின் குடும்பத்தினர் 450  பேர் வரும் 3 ,4 , 5,  தேதிகளில் துபாயில் உள்ள உலகிலேயே உயரமான கட்டிடத்தில் கூட்டம் நடத்த உள்ளோம் எனக்கூறி என்பின் உரிமையாளர் அழகர்சாமி (எ) ராஜா அனைவரையும் வருமாறு அழைத்துள்ளார்.

இங்கு மாபெரும் மாற்றம் நமக்கு நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார். இந்த 450 பேர் இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் தனியாரால் நடத்தப்படும் நிறுவனத்தின் கூட்டத்தில் பங்குபெற முறையான அனுமதி வாங்கி உள்ளனரா ? அல்லது இதற்கு அனுமதி எதுவும் தேவையில்லையா.? தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்த தடைவிதித்து இருந்தும் தஞ்சையில் கைது நடவடிக்கை எடுத்தும் மேலும் தஞ்சையில்  ஒருவர் தேடப்பட்டு வரும் நிலையில்



  காவல்துறை முறையாக நடவடிக்கை எடுத்து வரும் போதே திருச்சியில் நேற்று காலை மன்னார் புரத்தில் ஓர் புதிய ஹோட்டலில் கூட்டம் நடத்தப்பட்டது. முறையாக காவல்துறை அனுமதி பெற்றதா  இப்படி கூட்டம் நடத்தி வரும் பொழுது திருச்சியில்  எல்பின் நிறுவனத்தால் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டால் யாரை குற்றம் கூறுவார்கள் திருச்சி காவல் துறையால் முறையாக அனுமதி வழங்கப்பட்டதா ? இன்று காலை  முதல் திருச்சி சங்கம் ஹோட்டலில் கூட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சியில் ELFIN நிதி நிறுவனம் மக்கள் கூட்டம் நடத்த காவல்துறை டிஜிபி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் கண்டொன்மெண்ட் காவல்துறை இன்ஸ்பெக்டரிடம் ஸ்பெஷல் அனுமதி வாங்கி விட்டதாக எல்பின் சகோதரர்கள் கூறி வருவதாக தகவல்.



பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*


On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

அமைதியாக போராட்டம் நடத்திய இஸ்லாமியா்களுக்கு எதிராக வன்முறை நடைபெற்றதை கண்டித்து திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.   

                                                                                                                                        குடியுாிமை திருத்த சட்டத்திற்கு எதிா்ப்பு தொிவித்து இஸ்லாமியா்கள் போராட்டம் நடத்தி வந்தனா். அப்போது குடியுாிமை சட்டத்திற்கு ஆதரவு தொிவித்து மறுபுறம் போராட்டம் நடைபெற்றது. இது வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் 21 போ் உயிாிழந்தனா். இந்த சம்பவத்தை கண்டித்து திருச்சியில் இன்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு திரண்ட மக்கள் அதிகாரத்தினா், வன்முறை சம்பவத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினா். அமைதியான வழியில் போராட்டம் நடத்திய இஸ்லாமியா்கள் மீது திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டு உள்ளது என்று அவா்கள் குற்றம் சாட்டினா். மக்கள் அதிகாரத்தினா் ஆா்ப்பாட்டத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது..

Thursday, February 27, 2020

On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

திருச்சி ஜமால் முகமது கல்லுாாி மாணவா்கள் தலைகளில் துணி பட்டை அணிந்து குடியுாிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
                                                                                                   
                                                                                                    குடியுாிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜமால் முகமது கல்லுாாியிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுாிமை திருத்த சட்டம் வேண்டாம் என்ற வாசகம் பதிக்கப்பட்ட துணி பட்டையை தலையில் கட்டிக்கொண்டு வந்த மாணவா்கள் அச்சட்டத்தை கண்டித்தும், டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மாணவா்களும், ஏராளமான மாணவிகளும் கலந்து கொண்டனா். மாணவா்களின் ஆா்ப்பாட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசாா் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனா்.
On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

                

திருச்சி ஜெகன்மாதா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற நாணய கண்காட்சியினை ஏராளமான பள்ளி, கல்லுாாி மாணவ, மாணவிகள் ரசித்து மகிழ்ந்தனா். 

                 

                                                            
திருச்சி ஜெகன்மாதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் உலக நாணயம் மற்றும் பணத்தாள் கண்காட்சி இன்று நடைபெற்றது. 

இந்த கண்காட்சியினை பள்ளி தாளாளர் சகாயராஜ் தொடங்கி வைத்தார். பழங்காலம் முதல் தற்காலம் வரையிலான பணத்தாள்கள், காசோலை, வரைவோலை, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, பண வடிவ மற்ற பிட்காய்ன்கள் என பல்வேறு அம்சங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

 சங்க காலத்தில் மன்னா்களான சேர, சோழ, பாண்டியர் தங்கள் சின்னங்களான வில், மீன், புலி  முத்திரைகள் அடங்கிய நாணயங்கள், சங்க காலத்திற்கு பின் தமிழ் எழுத்துக்களுடன் பல்லவர் காலத்து நாணயங்களும் இடம் பெற்றிருந்தன. அமொிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 200 நாடுகளின் பணத்தாள்கள் , நாணயங்கள் மற்றும் தபால் தலைகளும் இக்கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. 

 இந்த கண்காட்சியினை ஏராளமான பள்ளி, கல்லுாாி மாணவா்களும், பொதுமக்களும் கண்டு ரசித்தனா். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார்,  முகமது சுபேர் உள்ளிட்டோா் இந்த நாணய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனா்.
On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் பணியாளா்கள் இன்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 
                                                                                                 
                                                               தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் சாா்பில் இன்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில், அச்சங்கத்தின் மாநில பொருளாளா் ஜெய்கணேஷ் தலைமையில் நடைபெற்ற 


இந்த ஆா்ப்பாட்டத்தில், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்,உயாி பணியாளா்களை இதர அரசு பணியிடங்களில் பணி அமா்த்திட வேண்டும், முறையற்ற ஆய்வுகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மாநில தலைவா் சிவக்குமாா், மாநில செயலாளா்கள் முருகானந்தம், கோவிந்தராஜன், இளங்கோவன், கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலா் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    

                   

ஆளுங்கட்சிக்கு விளம்பரம் செய்யும்  எதிர்க்கட்சி அதன் ரகசியம் என்ன?


ஜாமீன் வாங்க பலகோடி ரூபாய் பணத்துடன் அலையும் எல்பின் சகோதரர்கள்.



தஞ்சையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கைதானவர் பிரசன்ன வெங்கடேஷ். 

                    
இவர் தந்த ரகசிய வாக்குமூலம் நேற்று முன்தினம் கைதானவர் கிங்ஸ்லி. கிங்ஸ்லி மூலமும் பல்வேறு தகவல்கள் காவல்துறைக்கு கிடைத்துவிடும் என்பதால் முதல்கட்டமாக பிரசன்ன வெங்கடேசை ஜாமினில் வெளியே எடுக்க ஒரு பலகோடி ரூபாய் பணத்துடன்  முக்கிய ஆளும் கட்சி  மூத்த  தலைமை வழக்கறிஞரிடம்ஆலோசனை கேட்டும் சிபாரிசு செய்யக்கோரி வருகிறார்களாம். 

                           
இதைத்தொடர்ந்து கிங்ஸ்லி ஜாமீனுக்கு எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை என கூறி வருகிறார்களாம் எல்பின் சகோதரர்கள். 


(இவர்கள் மீது திருச்சி குற்றப் பொருளாதார பிரிவு 1/19 வழக்கு தொடர்ந்த போது கோடிக்கணக்கில் செலவு செய்து ஜாமீன் பெற்றவர்கள் என்பதும் ஜாமின் முன்பணமாக கோடிக்கணக்கில் பிணைத்தொகை கட்டியதும் குறிப்பிடத்தக்கது)


தஞ்சை காவல்துறையினரால் தேடப்படும் சத்யபிரியா எல்பின்நிறுவனத்தின் உள்ள காவல்துறை நெருங்க முடியாத அளவிற்கு ஒரு VVIP பாதுகாப்பில் உள்ளதாகவும் சத்யபிரியா கைது நடவடிக்கை தடுக்க ஆளுங்கட்சி 
விஐபியிடம் பேரம் பேசப்படுவதாகவும் அவர்களுடைய எல்பின் வட்டாரத்தில் கூறி வருவதாக தகவல்
                    


 இத்தனை கோடி செலவு செய்வதற்கு காரணம் தங்களின் ரகசியம் வெளியில் கசிந்து விடக்கூடாது காவல்துறையை எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமே காரணம். ஜாமினில் வெளியில் வந்தாலும் பிரசன்னா மற்றும் கிங்ஸ்லி ஆகிய இருவர் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என தெரிகிறது.

கோடிக்கணக்கில் பணம் செலவழித்து காவல் துறையினரை விலைக்கு வாங்கி விடலாம் என நினைத்து செயல்பட்டு வருகின்றனர் எல்,பின் சகோதரர்கள் அழகர்சாமி  என்கிற ராஜா மற்றும் ரமேஷ் குமார்  என்கிற ரமேஷ்.

இவர்களின் நினைப்பு நிறைவேறுமா ? அல்லது காவல்துறையினர் செயல்பாடு வெற்றி பெறுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.






பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*


On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    
திருச்சியில் பாராளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி
                 

டில்லியில் அதிகாரத்தை கையில் வைத்துள்ள மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் வன்முறை உள்ளிட்ட அசம்பவங்களை தவிர்த்திருக்கலாம். நீதிமன்ற நீதிபதிகள் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். மத்திய அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். குண்டர்களையும்  ராணுவம்,  போலீசையும் வைத்து எந்த போராட்டத்தையும் அரசு ஒடுக்கி விட முடியாது.

                 

சட்டம் என்பது சாதி மதம் மொழி இவற்றின் அடிப்படையில்  இல்லாமல் தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இருக்கவேண்டும். மேலும் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் கூடிய வகையில் இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் மக்களை நாடற்றவர்களாக மாற்றுவது கூடாது. இத்தகைய அச்சத்தால் தான் மக்கள் போராடி வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருக்கக்கூடிய சட்டம்தான் அப்படியே நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றால் எதற்காக திருத்த சட்டம் கொண்டு வந்தார்கள். புது சட்ட வடிவில் பிரச்சனை இருக்கிறது என்பதைத்தான் மக்கள் போராட்டம் காட்டுகிறது. மக்களை தூண்டிவிட்டு யாரும் போராட வைக்க முடியாது. மக்களுக்கு பிரச்சனை ஏற்படும்போது மக்கள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள்.

 திமுக சட்டமன்ற உறுப்பினர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்  மக்களுக்காக குரல் கொடுத்து வந்த திறமையான சட்டமன்ற உறுப்பினர். நல்ல மனிதர் .

உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்களில் மட்டுமில்லாமல், தமிழகத்தில் 65 விழுக்காடு தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது இத்தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் நிதி மக்களுக்கு சென்று சேரும்.

 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் இடம் கேட்கிறதா?  திமுக கொடுக்கிறதா? என்பதெல்லாம் தெரியாது. அது இரு கட்சித் தலைவர்கள் பேசி முடிவு செய்ய வேண்டிய ஒன்று. அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

 மக்களுக்கு பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் பணிகள் நிறைய கிடைக்கின்றன.வளர்ச்சி நிதி  5 கோடியைக்கொண்டு  மக்களை திருப்திப்படுத்த முடியாது. அந்த நிதியை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும் அல்லது அந்த நிதியை நீக்கிவிட வேண்டும். வளர்ச்சி நிதியை கொண்டு தான் மக்களுக்கு ஒரு சில நன்மைகளை செய்ய முடிகிறது. என  பாராளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி

Wednesday, February 26, 2020

On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
திருச்சிராப்பள்ளி திருவரங்கம் வட்டம் வெள்ளித்திரு முத்தம் கிராமம் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வளாகத்தில் சிறிய காசுகள் சிறிய உண்டியலில் அடைக்கப்பட்டு இன்று கண்டெடுக்கப்பட்டது 
                      

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் அம்பாள் சன்னதி எதிர்ப்புறம் பிரசன்ன விநாயகர் சன்னதி பின்புறம் அமைந்துள்ள கொட்டாரம் வாழைத்தோட்டம் பகுதியில் செடிகொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி திருக்கோயில் பணியாளர்கள் இன்று காலைமுதல் நடைபெற்றது மேற்படி இடத்தை சுத்தம் செய்து நந்தவனம் அமைத்து பூச்செடிகள் அமைப்பதற்காக முன்னேற்பாடுகள் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் செய்து வரப்பட்டது 
                    

மேற்படி பகுதியில் அமைந்துள்ள உதிய மரம் கீழ்ப்புறத்தில் உள்ள மணல் பகுதியில் சிறிய செம்பினால் ஆன உண்டியல் ஒன்று இருந்தது நண்பகல் 12.30 மணி அளவில் கண்டறியப்பட்டது மேற்படி உண்டியலில் சிறிய அளவிலான சுவாமி உருவம் பதித்த 504 சிறிய காசுகளும் சற்று பெரிய அளவிலான ஒரு காசும் இருந்தது ஆக மொத்தம் 505 பொற்காசுகள் இருந்து கண்டெடுக்கப்பட்டது சுத்தம் செய்யும் பணி திருக்கோயில் உதவி ஆணையர் செயல் அலுவலர் திருக்கோயில் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்களால் செய்யப்பட்டது 
                 

திருச்சிராப்பள்ளி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நகை சரிபார்க்கும் அலுவலக பணியாளர்கள் வழியாக நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் நேரில் வந்து மேற்படி காசுகளை பார்வையிட்டு மேற்படி இனங்கள் அனைத்தும் இனங்கள் என உறுதி செய்துள்ளதாகவும் மேற்படி சிறிய உண்டியலில் கீழ்காணும் விவரப்படி பெண்கள் இருந்ததாகவும் தெரிய வருகிறது மேற்கண்ட 504 சிறிய பெண் காசுகளும் ஒரு பெரிய காசு காவல் ஆய்வாளர் மற்றும் இரு சாட்சிகள் முன்னிலையில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் உதவி ஆணையரிடம் இருந்து இன்று ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது