Sunday, March 15, 2020

On Sunday, March 15, 2020 by Tamilnewstv in    
எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் பைஜி தலைமை வகித்தார்.

தேசிய பொதுச் செயலாளர் அப்துல் மஜீத், மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது  செய்தியாளரிடம்  மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில், தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 48 இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது என்பிஆர்.க்கு எவ்வித ஆவணமும்  வழங்க வேண்டியதில்லை. 'டி' பிரிவு குடிமக்கள் என்று கணக்கெடுப்பின்போது குறிப்பிடப்படாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக தலைமைச் செயலாளர் தெரிவித்தார். எனினும் என்பிஆர்.க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எதிராக நடைபெறும் ஒத்துழையாமை இயக்கத்தில் எஸ்டிபிஐ கட்சி பங்கேற்கும்.  தமிழக அரசு நிச்சயம் தீர்மானம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. என் ஆர் பி க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் தேசிய குடியுரிமை சட்டத்திதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்.
பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் தூண்டுதலின் பேரில்தான் டெல்லியில் கலவரம் நடைபெற்றது. இது முற்றிலும் இனக்கலவரம் தான். இதில் பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கு எவ்வாறு நஷ்டஈடு வழங்கப்பட்டதோ அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். காவிரி டெல்டா பாதுகாப்பு வேளாண் மண்டலத்தை வரவேற்கிறோம். அதேசமயம் இதில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்த்து முழுமையான ஒரு சட்டமாக கொண்டுவர வேண்டும். மேலும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் இதர பகுதிகளுக்கான நகராட்சி, மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றார்.
On Sunday, March 15, 2020 by Tamilnewstv in    
திருச்சி


தனியார் உடற்பயிற்சி கூடத்தில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோன பரிதாப சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி கேகே நகர், கோவர்தன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார்-சாவித்திரி தம்பதியின் மூத்த மகன் ராகவன் (22), இவர் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் ஃபிட்னஸ் என்ற பெயரில் இயங்கிவரும் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் கடந்த 24 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நீராவி குளியலுக்காக சென்றார்.இங்கு திருச்சி நகரைச் சேர்ந்த காவல்துறை அலுவலர்கள், தொழிலதிபர்கள் என பலரும் உடற்பயிற்சி, நீராவி குளியல், மசாஜ் போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்த பயிற்சி கூடத்தில் ராகவனும் நீராவி குளியலுக்காக ஏற்கனவே மூன்று முறை சென்று வந்துள்ளார்.இந்த பயிற்சி கூடத்தில் நீராவிக் குளியல் அறை ஒரு கழிவறை போல் அமைக்கப்பட்டுள்ளது. நீராவி அளவு மற்றும் நேர கட்டுப்பாட்டுக்கு ஒரு பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கதவை சாத்திவிட்டு நீராவி குளியலில் ஈடுபட்டிருந்த ராகவனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், சுதாரித்துக்கொண்டு கதவை தட்டியுள்ளார். ஆனால் யாரும் கதவைத் திறக்கவில்லை. இதனால், ராகவன் நீராவி குளியல் அறை உள்ளேயே மயங்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.ரத்தம் கொட்டிய நிலையில், நீராவி வெளியேறி கீழே விழுந்த ராகவனின் கால்களை தாக்கியதில், அவரது ஒரு கால் முற்றிலும் நீராவி வெப்பத்தால் வெந்துள்ளது. ரத்தக்கசிவு கதவு வழியாக வெளியே வந்ததைப் பார்த்த ஊழியர்கள் உடனடியாக ஓடிச்சென்று கதவை திறந்து பார்த்தனர். இதனையடுத்து மயக்க நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராகவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.ஜிம்மில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோனதுஆனால், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்ததால் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு காலில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாள்கள் கோமா நிலையிலும், அதைத் தொடர்ந்து 6 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இதுகுறித்து ராகவனின் பெற்றோர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று நியாயம் கேட்டதற்கு, சிகிச்சைக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் தற்போது வரை சிகிச்சைக்கான செலவு தொகையையும் வழங்காமல் பெற்றோரையும் உடற்பயிற்சி கூட நிர்வாகம் மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் உடற்பயிற்சி கூடத்தில் எவ்வித பாதுகாப்பு அம்சங்களும், வழிகாட்டி நெறிமுறைகளும் இல்லாதது தெரியவந்தது. மேலும் நீராவியில் ரசாயனம் எதுவும் கலந்ததா?, இதன் காரணமாக ராகவன் மயக்கமடைந்தாரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் ஆனால் ஒரு நாள் வரை உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் கைது செய்யப்படவில்லை? கைது செய்யாதது ஏன் என்ற காரணம் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.அதிக வெப்பம் காரணமாக ராகவனுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட பயிற்சி நிலையங்களுக்கு முறையான அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா இவர்கள் பயிற்சி நிலையம் அமைக்க தமிழக அரசு புதிய நடைமுறை சட்டம் கொண்டு வரவேண்டும் முறையான சான்றிதழ்  பெற்று உள்ளார்களா என்பதனை காவல்துறை திருச்சியில்  மட்டுமன்றி  தமிழகம் முழுவதும்  முறையான உடற்பயிற்சி நிலையம் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதனை தமிழகம்  முழுவதும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து
On Sunday, March 15, 2020 by Tamilnewstv in    
சீனா உட்பட பல நாடுகளை கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வகையில் இந்தியாவும் இந்த நோய் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மிகுந்த சோதனைக்கு பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் பல்வேறு நாடுகளுக்கு செல்லக்கூடிய விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் இணைந்து இந்த சோதனையை நடத்துகிறது. சோதனையின்போது பயன்படுத்தப்படும் கருவி மூலம் வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள கைகழுவும் இடங்களிலும் திரவ வடிவிலான சோப்பு வைத்து பக்தர்கள் கைகழுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Saturday, March 14, 2020

On Saturday, March 14, 2020 by Tamilnewstv in    
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலணி உள்ளது. இந்தப் பகுதி காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. நீர்நிலைகளில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்ற விதி உள்ளது. இந்நிலையில் இந்தக் கரையில் தற்போது தனியார் பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டுமானப்பணிகள் முடிவடைந்து திறப்பு விழா காண உள்ளது. இந்நிலையில் காவிரிக்கரையில் கட்டுமான பணிக்கு அனுமதி அளித்ததை கண்டித்து திருவரங்கம் நகர அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு மக்கள் நலச்சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

பேட்டி:
திருவரங்கம் நகர அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு மக்கள் நலச் சங்கத் தலைவர் திருவேங்கடம்
On Saturday, March 14, 2020 by Tamilnewstv in    
*திருச்சியில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேருக்கு கொரோனா அறிகுறி

கேரளாவுக்கு சென்று வீடு திரும்பிய போது அவருக்கு  காய்ச்சல் ஏற்பட்டதால் ,  கல்லூரி விடுதியில் இருந்து உடனே  அவர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

கொரோனா வைரஸ்  அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில்  கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .  தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று திரும்பிய நிலையில் அம்மாணவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  இந்தியாவிலும்  இந்த வைரஸ் பரவி வருகிறது .  இந்நிலையில் திருச்சி  புத்தூரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில்,  கொரோனா நோய் பாதித்தவருகளுக்கு  சிகிச்சைக்காக சிறப்பு வார்டு  ஏற்படுத்தப்பட்டுள்ளது .  இந்நிலையில்  திருச்சியில்  விமான நிலையம் உள்ளதால் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்திலேயே  மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த படுகின்றனர்

அதில் யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறிகள் ,  அதாவது,   சளி ,  இருமல் ,  மூச்சுத் திணறல் ,  இருப்பது தென்பட்டால் அவர்கள் உடனே தனி வாகனத்தில் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் .  கடந்த 30 நாட்களில் 12 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வீடு  திரும்பியுள்ளனர் .  இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு மலேசியாவில் இருந்து திருச்சி வந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆருகே உள்ள பரம்பூர் என கிராமத்தை சேர்ந்த ஈஷா அனிபா என்ற இரண்டு வயது  குழந்தை சளி காய்ச்சல் தொற்றுஅறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
On Saturday, March 14, 2020 by Tamilnewstv in    
திருச்சி-    

புதுகை சத்தியமூர்த்தி எல்பின் நிறுவனம் குறித்து அளித்த  புதிய தகவல்கள்




 நேற்று சென்னையில்
பெரிய அளவில் கூட்டம் நடைபெற்றது


 அதில் எல்ஃபின்  நிறுவனத் தலைவர் ராஜா அவர்கள் மதுரை குற்ற பொருளாதாரப் பிரிவில் நேற்று ஆஜராக வேண்டும் என்று காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது ஆனால்

காவல்துறையை மதிக்காமல்  காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாமல் நேற்று  சென்னையில் பெரிய அளவில்பண  பரிமாற்றங்கள் மற்றும் அதன் விபரம் குறித்தும் கூட்டம் நடத்தியுள்ளனர் வருகின்ற


மே 15 அன்று  அழகர்சாமி என்கிற ராஜாவிற்கு பிறந்தநாள் வருகிறது அதனை முன்னிட்டு புதிய கட்சி ஒன்று ஆரம்பிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன மேலும் அன்று தபால்தலை வெளியிடவும் ஏற்பாடு செய்து வருகின்றனர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ள நிலையில் இவர்கள் தபால் தலை வெளியிடுவது என்பது வருத்தமாக உள்ளது ஏனெனில் தபால் தலை என்பது மதிக்கத்தக்க ஒருவருக்கு அரசால் அறிவிக்கப்படும் கவுரவமாக கருதப்படுகிறது

  இவர்களுக்கு இவர்களே பணம் கொடுத்து டாக்டர் பட்டம் கொடுத்துக் கொள்வதும் தபால் தலை வெளியிட்டு கொள்வதும் நினைக்கையில்   நகைச்சுவையாகவும் உள்ளது .


ஒன்றுக்கு 3 பங்கு தருவது ஒரு லட்சம் என்றால் மூன்று லட்சம் தரப்படும் என்று அழகர்சாமி என்கிற ராஜா அறிவிப்பு கொடுத்துள்ளார்
மத்தியஅரசு இப்படிப்பட்டஅறிவிப்புகளை நம்ப வேண்டாம் என்று  கூறினாலும்  ஒன்றுக்கு மூன்று தருவதாகக் கூறி தொடர்ச்சியாக அறிவிப்புகள் அறிவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் பல்வேறு வழக்குகள் இவர்கள்  மீது நிலுவையில் உள்ள நிலையில் தனிமனிதன் இப்படிப்பட்ட அறிவிப்பு கொடுப்பது என்பது சட்டத்திற்குப் புறம்பானது  என்பது  எல்லோரும் அறிந்தது இவர்கள் நிறுவனத்தில் சேரும் ஒவ்வொரு மனிதருக்கும் இவர்களால் ஒன்றுக்கு 3 என்ற விகிதத்தில் பணம் தர முடியும் என்பது சாத்தியமானால் தமிழ்நாட்டு மக்கள் முழுவதும் இத்திட்டத்தில் சேர்ந்தால் இவர்களால் பணம் தர இயலுமா அரசாங்கத்திற்கு  இல்லாத அக்கறையும் பணமும்  இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது    தற்போது ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளை வைத்து காவல்துறையை சமாளிக்கலாம் என்றும் மோசடி வழியில் ஒவ்வொரு நாளும் புதிய வழியில் பணம் சம்பாதிக்க ஏதேனும் ஒரு வழியை கையாண்டு கொண்டே உள்ளனர் உண்மை தன்மை அறியாத மக்களே இறுதியில் ஏமாந்து போகிறார்கள்  மேலும் இவர்கள்
புதிய கம்பெனி ஒன்று தொடங்குவதாக கூறிவருகின்றனர்  
மைக்ரோ பைனான்ஸ் திட்டம் வகுத்துள்ளனர் அதாவது ஒவ்வொரு கிராம வாரியாக பெண்களிடையே இத்திட்டம் சென்றடைய வேண்டும் அதாவது மாடு வளர்ப்பு திட்டம் இப்படியெல்லாம் பல்வேறு அறிவிப்புகள் கொடுத்து மக்களிடையே கொண்டு செல்கிறோம் என்று மக்களை ஏமாற்றி தான் வருகின்றனர்   தற்போது ஷோரூம் திறப்பதற்கான  முயற்சிகள் முடிவடைந்துள்ளன இதிலும் பெரிய அளவில் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது
மக்களை திசைதிருப்பி கொள்ளையடிக்கும் நோக்கத்துடனே செயல்பட்டு வருகின்றனர் காவல்துறையில்  அதிகாரிகள் இன்றைக்கும் நேர்மையான முறையில் செயல்பட்டு தான் வருகிறார்கள் இவர்களை அரசும் காவல்துறையும் உற்றுநோக்கி தான் வருகிறது விரைவில் இவர்கள் சிக்குவார்களா படித்த மக்களும் பாமர மக்களும் ஏமாற்றப்படக் கூடாது என்பதே என் நோக்கமாகும் என்று சத்தியமூர்த்தி தெரிவித்தார் மேலும் பொதுநலன் கருதி எல்பின் நிறுவனம் குறித்த மோசடி உண்மைகளை பொதுநலன் கருதி நான் வெளியிடும் தகவல்களை செய்தியாக வெளியிடும் செய்தியாளர் சபரிநாதன் அவர்களும் இவர்களால் இன்றளவும் பல்வேறு இன்னல்களை சந்தித்து தான் வருகிறோம் இவர்கள்  இருவர் மட்டும் தானே என்று எதேதோ வழியில் எங்களுக்கு பொய் வழக்குகள் கொலை மிரட்டல்கள் போன்றவற்றை செய்திதான் வருகின்றனர் தமிழகம் முழுவதும்  எங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட  பல்வேறு வழக்குகள் உள்ளன இதில் இவர்கள் 101வது கொலை வழக்காக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று எல்பின் நிறுவனத்தை நம்பி இருக்கும் புதிய பத்திரிக்கையாளர்  சங்கத்தினர் இடம்  எல்பின் சகோதரர்கள் கூறியுள்ளனர்   இருந்தபோதிலும் எங்களுக்கு கட்டாயம் நம்பிக்கை இருக்கிறது  காவல்துறையின் உதவியுடன் ஒரு சிறிய  உண்மைதான் பெரிய மோசடி கும்பலுக்கு முடிவு கட்டும்

Friday, March 13, 2020

On Friday, March 13, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 13

டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் இஸ்லாமிய அமைப்பன் மாநில நிர்வாகிகள் கைதை கண்டித்து திருச்சியில் கண்டன போராட்டம்

இந்தியா முழுவதும் சி.ஏ.ஏ. என்.சி.ஆர், என்.பி.ஆ சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைக்கு காரணமென பொய்யாக தொடர்புபடுத்தி கைது  செய்து வருகின்றனர். சங்பரிவார் மற்றும் டெல்லி காவல்துறை இருவரும் இதற்கு பொறுப்பாவர்கள்.


ஒரு ஜனநாயக போராட்டத்திற்கான ஈடுபட்டிருந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்டின் டெல்லி மாநில தலைவர் பர்வேஸ் அகமது, மாநில செயலாளர் முகமது இலியாஸ், மாநில அலுவலக செயலாளர் முகீத் ஆகியோர் டெல்லி காவல்துறையால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மற்றொரு பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர் டானிஷ் கைது செய்யப்பட்டார். மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை அவதூறு செய்வதற்கான தொடர் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த போக்கை கண்டித்து
மரக்கடை, ராமகிருஷ்ணா பாலம் அருகில்  மாவட்டச் செயலாளர்,
முஜிபுர் ரஹ்மான் தலைமையில் ,
கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
இதில் SDPI மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் 200க்கு மேற்பட்டோர் கலந்து ெகாண்டனர்.

பேட்டி :
முஜிபுர் ரஹ்மான்
மாவட்ட தலைவர் .
பாபுலர் பரண்ட்ஸ் ஆஃப் இந்தியா


On Friday, March 13, 2020 by Tamilnewstv in    
திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக நடவடிக்கை


திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஒருவருக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு பணியிடமாற்றம் ஆக அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு ஊருக்கு மாற்றப் பட்டுள்ளார் .

 அதற்கு மாறாக கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல்துறை ஆய்வாளர் குணசேகரன் மணச்சநல்லூர் ஆய்வாளர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 துறையூர் ஆய்வாளர் குருநாதன் லால்குடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் ஜெயசித்ரா துறையூர் காவல்துறை ஆய்வாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வாசுகி வடக்கு மண்டலத்தில் மாற்றப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் லட்சுமி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணி மாற்றம் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்
On Friday, March 13, 2020 by Tamilnewstv in    
திருச்சி முதலமைச்சராக பதவியேற்க மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது வருத்தமளிப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரை கட்டாயமாக இன்று அறிவித்து விடுவார் என்ற ஆவலில் திருச்சி ரஜினி ரசிகர்கள் மன்றத்தினர், சிந்தாமணி அண்ணாசிலை அருகேயும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகேயும் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் ஆவலுடன் காத்திருந்தனர்.

இதையடுத்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது ரஜினி பேசிய பேச்சு, அறிவிப்புகளைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த பட்டாசுகளை வெடிக்காமல் திருப்பி எடுத்துச் சென்றனர். அதேபோல் இனிப்புகளையும் வழங்காமல் எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் பகுதி ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எங்களது தலைவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்தோம். இதற்காக காலை 5 மணி முதல் காத்திருந்தோம். அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்து விட்டார். ஆனால், முதலமைச்சர் பதவியை ஏற்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.


தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஆனால், அந்த வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும். இரண்டு ஜாம்பவான்களை எதிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். அந்த துணிச்சல் இருப்பதால்தான், நாங்கள் அவர் பின்னால் நிற்கிறோம். அவர்களை எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
தேர்தல் நேரத்தில் எங்களது பணியை அவர் பார்ப்பார். அவர் வந்தால் நன்றாக இருக்கும். வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் உழைக்கத் தயாராக இருக்கிறோம்.

ரஜினி வந்தால் ஓட்டு போடுவோம் என்று பெண்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. ரஜினி கைகாட்டும் ஆளுக்கு ஓட்டுப்போட நாங்கள் தயாராக இல்லை என்று கூறுகின்றனர். அவர் கூறிய வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியுமே தவிர, வேறு யாராலும் நிரப்ப முடியாது. மன்ற நிர்வாகிகளுக்கு பதவி இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், அவர் முதலமைச்சராக ஆட்சியில் அமர வேண்டும். அதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி' என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பொதுமக்களை விட அவரது ரசிகர்கள் இதை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், தனது அரசியல் நிலைப்பாடு குறித்த அவரது இன்றைய அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.