Wednesday, March 18, 2020

On Wednesday, March 18, 2020 by Tamilnewstv in    
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா திருச்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பாராட்டுக்குரியது. திரையரங்கம், மால்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வர்த்தக நிறுவனங்களை மூட வேண்டும் என்பது ஏற்க கூடியது. ஆனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, பால் உள்ளிட்ட கடைகளை பூட்ட கட்டாயப்படுத்துவது சரியல்ல. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட வேண்டிய வர்த்தக நிறுவனங்கள் எவை? எவை? என்பதை மாநில அரசு முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட அளவில் ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையரும் இதை முடிவு செய்யக்கூடாது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
 மார்ச் 31ஆம் தேதி வரை வர்த்தகர்கள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகளை முன்தேதியிட்டு வழங்கியுள்ளார்கள். தற்போது வர்த்தக நிறுவனங்கள் 31ம் தேதி வரை மூடப்படுவதால் வங்கிகளில் அத்தகைய காசோலைகளை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிடவேண்டும். வருமான வரி செலுத்துவதற்கான கடைசி நாளான மார்ச் 31-ஆம் தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி.க்கு காலஅவகாசம் வழங்க வேண்டும். அதே போல் மத்திய, மாநில அரசுகளுக்கு வரி, உள்ளாட்சி கடைகளின் வாடகை போன்றவற்றை செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அனைத்துக் கடைகளையும் மூட வற்புறுத்துவதால் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கு அன்றாட அத்தியாவசிய பொருட்களை யார் வழங்குவது என்ற கேள்விக்குறி எழுகிறது. காய்கறி கடைகளை மூடினால்  விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் விளைவிக்கும் காய்கறிகளை வியாபாரிகள் தான் விற்பனை செய்கின்றனர். சில இடங்களில் திடீரென்று கடையை மூடும்படி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். வியாபாரிகளை அச்சுறுத்தி துன்புறுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எந்தெந்த கடைகள். அடைக்க வேண்டும்? எந்தெந்த கடைகள் அடைக்க கூடாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அவ்வாறு சீல் வைத்தால் மாநகராட்சி ஆணையரை சந்தித்து தான் பின்னர் கடையை திறக்க முடியும். இதுதொடர்பாக முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை ஆகியோரை சந்திக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார். உடன் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
On Wednesday, March 18, 2020 by Tamilnewstv in    
திருச்சி

திருச்சி மத்திய சிறை அருகே தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது.
என்.பி.ஆர்.க்கு எதிராக தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என சுமார்
1000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
 மத்திய அரசு கொண்டு வர இருக்கும் என்.பி.ஆர்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், உடனடியாக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மத்திய அரசின்
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிம் நிலையில் சி.ஏ ஏ,
என்.ஆர்.சி
என்.பி.ஆர் என்ற வாசகம் எழுதிய கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டது. அப்போது தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை பொது செயலாளர் அப்துல் கரீம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மத்திய அரசு என்.பி.ஆர் நடவடிக்கை மூலமாக  அனைவரிடமும் பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்று கட்டாய படுத்துகிறது,
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை.

அண்டை மாநிலமான கேரளா, பீகார் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் என்.பி.ஆர்.க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் சட்ட பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
 எனவே தமிழக அரசு இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேட்டி:
அப்துல் கரீம் மாநில துணை பொது செயலாளர் - தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத்
.
On Wednesday, March 18, 2020 by Tamilnewstv in    
திருப்பூர், திருச்சி தில்லைநகர்  தமிழகம் முழுவதும் பல இடங்களில் RMWC என்றும் பல பெயரில் நிதி நிறுவனம் அலுவலகம் அமைத்து பல கோடி ரூபாய் பொது மக்களை ஏமாற்றி சம்பாதித்து தற்போது திருச்சி மன்னார்புரத்தில்  தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டுவரும் நிறுவனம் எல்பின் என்கிற ஸ்பாரோ குளோபல் ஏஜென்சி


இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் அழகர்சாமி என்னும் ராஜா, எஸ் ஆர் கே ரமேஷ் என அழைக்கப்படும் ரமேஷ்குமார் ஆகிய இருவரும் விதவிதமான திட்டங்கள் அறிவித்து மக்களை ஏமாற்றி பல கோடி ஏமாற்றி சம்பாதித்து வருகின்றனர்.

சமீபத்தில் தஞ்சையில் அனுமதியின்றி நடத்திய கூட்டத்தை தொடர்ந்து தஞ்சை லீடர்கள் பிரசன்ன வெங்கடேஷ், கிங்ஸ்லி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு பெண் தலைமறைவானார். கைது செய்யப்பட்ட இருவரும் ராஜா என்கிற அழகர்சாமியால் பல கோடி செலவு செய்து ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து எல்பின் நிறுவனர் ராஜா காவல் துறையை எச்சரிக்கும் வகையில் வாட்ஸ்அப் ஆடியோ ரெக்கார்டிங் ஒன்றை அனுப்பினார்.
இதனால் காவல்துறையினர் ராஜா மீது கடும் கோபத்தில் இருந்தனர். இன்றைக்கு ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் எஸ்ஆர்கே ரமேஷ் என்கிற ரமேஷ்குமார் இருவரும் அலுவலகத்தில் கூட்டம் நடத்தி நடைபெற்ற கூட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளை வைத்து தஞ்சை காவல் நிலைய வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட்டோம் இனிமேல் தஞ்சையில் பிரச்சனை இல்லை என்று எல்பின் உறுப்பினர்களிடையே கூறி உள்ளனர்
இதனைத்தொடர்ந்து ராஜா மற்றும் ரமேஷ் மீது மதுரையில் தற்போது காவல்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக இவர்கள் மீது உள்ள வழக்குகளை தூசி தட்டினாலும் அதனையும் நாங்கள் மிரட்டியோ அல்லது பேரம் பேசி ஒன்றுமில்லாமல் செய்து விடுவோம் என்று தொடர்ச்சியாக அவர்கள் உறுப்பினர்களிடையே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளையும் காவல் துறையும் தமிழக அரசையும் எதிர்க்கும் வண்ணமே இவர்கள் வட்டாரத்தில் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகிறது அதற்கு உதாரணம் முன்பே வாட்ஸ் அப்பில் ராஜா என்கிற அழகர்சாமி ஆடியோ உதாரணம் அதேபோல் திருப்பூரிலும் மற்றும்  தமிழகத்தில்  காவல்துறையினர் பழைய வழக்குகளை தூசி தட்டி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே இவர்களிடம் ஏமாந்தவர்கள்  எதிர்பார்ப்பாக  உள்ளது .

எல்பின் நிறுவனத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் மாபெரும் கூட்டம் நடத்தி பெரிய அளவில் பணத்தை சுருட்டிக்கொண்டு ராஜா மற்றும் ரமேஷ் இருவரும் மீண்டும் தலைமறைவாக அவர்களா அதற்கு முன் காவல்துறை அதிரடி ஆக்ஷனில் களம் இறங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனால் காவல்துறையினர் வழக்குகளை துரிதப்படுத்தி  இதனால் இருவர் மற்றும்  இவர்களது கூட்டாளிகள் பலர் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனைத்தொடர்ந்து இவர்கள் நடத்தும் நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் தைரியமாக தொடர்ந்து புகார்கள் காவல்துறையிடம் அளிப்பார்கள் என பொதுமக்கள் கூறிவருகிறார்கள்

Tuesday, March 17, 2020

On Tuesday, March 17, 2020 by Tamilnewstv in    
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்

 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் சார்பில் கோயில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது


ஸ்ரீ ராமானுஜர் சன்னதி ,சக்ரத்தாழ்வார் சன்னதி ,தாயார் சன்னதி ,பெருமாள் சன்னதி ஆகிய இடங்களில் பக்தர்கள் வரிசையில் செல்லும் வழியில் உள்ள இடங்கள் மற்றும் கம்பிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

இது இன்று முதல் தினமும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை தெளிக்கப்படும் என்று மாநகராட்சி உதவி ஆணையர் தெரிவித்தார். இந் நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் உதவி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் டேவிட் முத்துராஜ் , சகாயராஜ் ,சுகாதார மேற்பார்வையாளர் ராஜா மற்றும் மாநகராட்சி துப்புறவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
On Tuesday, March 17, 2020 by Tamilnewstv in    
திருச்சி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்
தேவதானம் பகுதியை சேர்ந்த வாலிபர் செல்வமணி என்பவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில்  செல்வமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட்டு பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

On Tuesday, March 17, 2020 by Tamilnewstv in    
சமயபுரம் மாரியம்மனுக்கு 2 வது பூச்சொரித்தல் விழா விமர்சியாக நடைபெற்றது..!

உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.

மார்ச் 15 ம் தேதியான நேற்று 2 வது வார பூச்சொரித்தல் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. காலை முதல் அன்னதானங்கள் வழங்கப்பட்டது , மாலைமுதல் புஸ்ப பல்லாக்குகள் விமர்சியாக
மேலதாலம் முழங்க நடனமாடிபடி  பூக்களை எடுத்து சென்றனர்.

இந்த நாள்களில் மக்களின் நலனுக்காக ஈஸ்வரனை நோக்கி மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதமிருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த விரத காலத்தில் அம்மனுக்கு இளநீர், நீர்மோர், பானகம், துள்ளுமாவு மட்டுமே படைக்கப்படுகிறது.
On Tuesday, March 17, 2020 by Tamilnewstv in    
திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஜான்சன் லிப்ட் நிறுவனம் சார்பில் நடந்த இந்த இரு சக்கர வாகன  பேரணியை மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் விக்னேஸ்வரன் தொடங்கி வைத்தார்.


இந்த பேரணி திருச்சி மத்திய பேருந்து நிலையம் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து தொடங்கி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா, அரசு மருத்துவமனை, புத்தூர் நால்ரோடு, தென்னூர் ஹை ரோடு வழியாக தில்லை நகரை சென்றடைந்தது. இந்த பேரணியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக சாலை விதிகளை மீற மாட்டோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

பேட்டி:
 ஜான்சன் நிறுவன திருச்சி கிளை மேலாளர் கமலக்கண்ணன்
On Tuesday, March 17, 2020 by Tamilnewstv in    
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில்

திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி கீழே புலிவார்டு ரோடில்  அமைப்பின் நிறுவன தலைவர் அந்தமான் சுப்பிரமணியன் இந்த தண்ணீர் பந்தலை திறந்து வைத்து ஏழை எளியவர்களுக்கு வழங்கினார். இளநீர், தர்பூசணி, மோர் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது. முதலாவது ஆண்டாக இந்த தண்ணீர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கோடை காலம் முடியும் வரை தினமும் இந்த தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு மக்கள் தாகம் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் சேகர், அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் காட்வின், முபாரக், சந்தோஷ் குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த தண்ணீர் பந்தல் மூலம் கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் தொழிலாளர்கள் பயனடைந்தனர்.

Monday, March 16, 2020

On Monday, March 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பல நூறு கோடி சம்பாதித்து வரும் நிறுவனம் தான் எல்பின்
இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ராஜா என்னும் அழகர்சாமி , எஸ் ஆர் கே என்னும் ரமேஷ் குமார் ஆகிய இருவர் மீதும் ஒவ்வொரு மாவட்டத்திலும்  காவல்துறை குற்றப்பிரிவில்  பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தஞ்சையில் அனுமதியின்றி கூட்டம் நடத்திய லீடர்கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறை டிஎஸ்பியை மிரட்டி அந்த வழக்கை வாபஸ் பெற வைத்ததாக கூறி வருகின்றனர்.
தற்போது மதுரையிலும் வழக்கு பதிவு  செய்யாமல்  இருக்க காவல்துறை அதிகாரிகளிடம் பேசி சரி செய்து விட்டதாக அவர்கள் தரப்பில் கூறி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழகம் முழுவதும் ELFIN
ஆலோசனை கூட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். முதலில் திருச்சியில் மாபெரும் கூட்டத்தை நடத்தி பின்னர் தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.
எல்பின் நிறுவனத்தின் சார்பில் ஒன்று கொடுத்தால் மூன்று என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தந்தால் 3 லட்சம், 3 லட்சம் தந்தால் 9 லட்சம், 10 லட்சம் தந்தா 30 லட்சம், ஒரு கோடி கொடுத்தால் 3 கோடி என்ற இந்த மாய வலையில் சிக்கிய பணம் கட்டியவர்களுக்கு  இதுவரை எந்த செக்கும் பாஸ் ஆகவில்லையாம். இதனால் தற்போது எல்பின்  நிறுவனத்திற்குள் தற்போது புகைச்சல் ஏற்பட்டு உள்ளதாக தகவல்.

தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு இவர்களது முகமூடியைக் கிழித்து எல்பின் இயக்குனர்கள் ராஜா என்னும் அழகர்சாமி  மற்றும் எஸ் ஆர் கே என்னும் ரமேஷ் குமார் அவர்களது கூட்டாளிகள்  பினாமிகள் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் ம்ற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.