Tuesday, April 07, 2020

On Tuesday, April 07, 2020 by Tamilnewstv in    
*Small Gesture of Help*

 *CBOA RAJASTHAN*

By the inspiration of our *GS Manimaran Sir* and
Under the guidance of our beloved *OJS Rajiv Nigam Sir*

*Today We, CBOA Jodhpur Team, donated 10 day's Ration (Rice, Dal, Oil, Salt,Condiments and Vegetables) to some 25 stranded labourers of Jharkhand in Kudi area. 

We will try and continue with the mission to help the needy.



Regards

Vikas Bhati
Regional Secretary
Jodhpur Region.

CBOA ZINDABAAD
AINBOF ZINDABAAD



Respected Comrade,


      I feel proud of you that You are providing a awesome opportunity by the God Almighty for serving bank workers as well as the society in whole through CANBAL, during the disasters like Tsunami, present health emergency, etc etc
    More over this rare opportunity did not have no other trade union leader in the country for which also I feel proud of You.
     I pray Lord Ranganatha of Srirangam to extend his blessings on You to achieve success in all of your endeavors, in the future also.

Regards,
RVS
Tiruchy.
On Tuesday, April 07, 2020 by Tamilnewstv in    
ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்களால் நடத்தப்பட்டு வரும் நல் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பாக பல்வேறு அறப்பணிகள் நடந்தேறி வருகின்றது.



இந்த ஊரடங்கின் காரணமாக  அரசுப் பொது மருத்துவமனையில் நோயாளியுடன் இருப்பவர்களுக்கும், சாலையோரத்தில் இருப்பவர்களுக்கும் தினமும் 200 நபர்களுக்கு  உணவு வழங்கி வருகின்றனர் அதனின் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்குட்பட்ட ஏழை எளிய அன்றாட கூலித் தொழில் செய்து வரும் அம்மக்களின் வாழ்வாதாரத்தையும்  வருமானம் இல்லாமல் முடங்கி கிடக்கும் அம்மக்களுக்கு உதவி செய்யும் வகையில் 500 குடும்பங்கள் தெரிவுச்செய்து அரிசி மற்றும் மளிகை பொருட்கள்  வழங்கப்பட உள்ளது.


இதனை 07.04.2020 இன்று தொடங்கி வைக்கப்பட்டது. கல்லூரி செயலர் மற்றும் தாளாளர்  A. K. காஜா நஜீமுத்தீன் அவர்கள் , பொருளாளர் M. ஜமால் முகமது அவர்கள் , முதல்வர் S. இஸ்மாயில் முகைதீன் அவர்கள் மற்றும் கல்லூரி விடுதி இயக்குனர் K.  N.  முஹம்மது பாசில்,  விடுதி ஒருங்கிணைப்பாளர். சையத் அலி பாதுசா, நல் உள்ளங்கள் அறக்கட்டளை  பேரா. H.E.சையத் முகமது, பேரா. பா. சிராஜூதீன், பேரா. ஜாஹிர் உசேன், சகோ.சதாம்., சமூகசெயற்பாட்டாளர். முகமது பிலால் பாகவி, நைனார் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.  முதற்கட்டமாக 15 குடும்பத்தினருக்கு கல்லூரி நிர்வாக செயலர் மற்றும் தாளாளர், பொருளாளர், முதல்வர், விடுதி இயக்குனர்  நிவாரணப் பொருட்கள் கொடுத்து துவங்கி வைத்தனர்.
On Tuesday, April 07, 2020 by Tamilnewstv in    
கொரோனா வைரஸ் தாக்குதல்  காரணமாக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து விதமான பேருந்து மற்றும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் பலர் தமிழகத்தில் ஆங்காங்கே சிக்கியுள்ளனர். இவர்கள் உணவுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே பூங்குடி கிராமத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் 60 குடும்பத்தினர் சிக்கித் தவித்து வருகின்றனர்.


இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வளையல் வியாபாரம் செய்வதற்காக பூங்குடி கிராமத்தில் முகாமிட்டனர். இங்கு தங்கி தங்களது வியாபாரத்தை செய்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்களது வியாபாரம் பாதித்துள்ளது. அதோடு தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கும் ரயில் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பாஜக சார்பில் "மோடி கிச்சன்" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் திருச்சி மணிகண்டம் அருகே உள்ள இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ஆதி த சர்க்காரம் அமைப்புடன் இணைந்து தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு சமையல் செய்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் காலை மதியம் இரு வேளை வழங்கப்பட்டு வருகிறது. நாகமங்கலம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, விழி இழந்தோர் பள்ளி, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த இரு வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக பூங்குடி கிராமத்தில் சிக்கியுள்ள வடமாநில ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் குடும்பத்திற்கு இன்று பாஜக மாவட்ட துணை தலைவர் அழகேசன், மாநில பொதுச் செயலாளர் சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் சேது அரவிந்த், இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகளை 60 குடும்பத்தினருக்கும் வழங்கினர். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி: அழகேசன். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட துணைத் தலைவர்.
On Tuesday, April 07, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 07

நிவாரணம் வழங்க கோரி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

கொரனா தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் கடைகளை அடைத்து வைத்துள்ளோம்.


இதனால்  இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் குடும்பத்தினர்
சுமார்10 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் கடை, மற்றும் வீட்டு வாடகை கட்ட முடியாமலும், தேவையான எதையும் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம். தமிழக முதல்வர் அமைப்பு சாரா நவாரிய சங்கத்திற்கு    அறிவித்துள்ள உதவிகளை எங்களுக்கும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

பேட்டி பாலசுப்ரமணியம்.
 மாவட்ட செயலாளர்.


On Tuesday, April 07, 2020 by Tamilnewstv in    
திருச்சி

திருச்சியில் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி சுரங்கம் அமைகப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் மருத்துவமனை ஊழியர்கள் வரவேற்பு  தெரிவித்துள்ளனர்.

கொரோணா பரவுவதை தடுக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி சந்தைகள்,திருச்சி சத்திரம் தற்காலிக காய்கறி சந்தையில் 269  கடைகள் , மருத்துவமனை, முக்கிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.



எனவே நாள்தோறும் ஏராளமான நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலர் பல்வேறு இடங்களில் இருந்து மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.  அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கிருமி நாசினி தெளிப்பது என்பது இயலாத காரியம்.
எனவே அதனை எளிதாக்கும் வகையில் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும்
காய்கறி சந்தை வளாகத்தில் கொரோனா  தடுப்பு கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் தங்களின்
இரு கைகளையும் உயர்த்தியவாறு செல்கின்றனர்.
 கிருமிநாசினி திரவம் அவர்கள் உடல் முழுவதும் தெளிக்கப்படுகிறது.  அதேபோன்று அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்பு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் இந்த கிருமிநாசினி சுரங்கம் தொடர்ச்சியாக மருத்துவமனை நேரங்களில் செயல்படும் எனக் கூறும் அதிகாரிகள்  இது சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக செயல் பட்டால் பல இடங்களில் துவக்கப்படும் எனவும் கூறினர்.

Monday, April 06, 2020

On Monday, April 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம்  மண்ணச்சநல்லூரை அடுத்த  தீராம்பாளையம் கிராம நியாய விலைக்கடையில் தமிழக அரசின் ஆணைக்கு புறம்பாக
நியாயவிலைக்கடை ஊழியர் கடையில் மக்கள் சமூக இடைவெளி விடாமல் நிற்கவைத்து கொரோனா நிவாரணதொகையும்,  டோக்கன் விநியோகம் செய்த்துக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் சென்று கேட்ட பொழுது  நியாய விலைகடையிலேயே வைத்து விநியோகம் செய்யுங்கள், 

இரவு 8 மணியனாலும் பரவாயில்லை விநியோகம் செய்யுங்கள் என்று மேலிடத்து உத்தரவு என்று கூறுவதாகவும்,  இவ்வாறு மக்களை அலட்சியபோக்கோடு, 

முகக்கவசம் அணியாமல், கிருமி நாசினி இல்லாமல் கூட்டமாக விநியோகம் செய்து வருவது திருச்சியில்   பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்துகிறது
On Monday, April 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி முசிறி

முசிறி தெருக்களில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் காய்கறிகள் விற்க ஏற்பாடு  எம் எல்ஏ துவக்கி வைத்தார் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டம் முசிறி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தெருக்களில் சென்று காய்கறிகளை விற்பதற்காக லோடு ஆட்டோ மூலம் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது .முசிறி பேரூராட்சி சார்பாக வாரந்தோறும் புதன்கிழமை திருச்சி ரோட்டில், டிஎஸ்பி அலுவலகம் எதிரே உள்ள சந்தையில் காய்கறிகள் விற்பனை நடைபெறும் .இந்த வார சந்தையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வீட்டிற்கு பயன்படுத்துவது வழக்கம் .இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வார சந்தை விடுமுறை விடப்பட்டது. இதனால் வியாபாரிகள் சந்தையில் கடை போடுவது தடைபட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு காய்கறிகள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது .தெருக்களில் வந்து காய்கறிகள் விற்கும் வியாபாரிகள் சிலர் அதிக விலைக்கு காய்கறிகளை விற்றதால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் முசிறி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக லோடு ஆட்டோ ஒன்றில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக உழவர் சந்தையில் வாங்கி வியாபாரத்திற்கு அனுப்பப்படுகிறது. இதுகுறித்து முசிறியைச் சேர்ந்த குடும்பத்தலைவிகள்  வாரந்தோறும்,  காய்கறிகளை சந்தையில் வாங்கி பயன்படுத்தி வந்தோம். வாரசந்தை நடைபெறாததால் சிரமம் ஏற்பட்டது. அதனை போக்கும் வகையில் பேரூராட்சி பேரூராட்சி நிர்வாகம் தெருக்களில் காய்கறிகளை விற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது மிகுந்த ஆறுதலைத் தருகிறது பொதுமக்களுக்கு கட்டுப்படியாகும் நியாயமான விலையில் காய்கறிகளை விற்பனை செய்வது வரவேற்கத்தக்கது என்றனர். முன்னதாக காய்கறி விற்பனையை முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், முசிறி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன்  ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.அப்போது மாவட்ட கவுன்சிலர் ரவிசந்திரன் , பேரூராட்சி தலைமை எழுத்தர் சேவியர் சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
On Monday, April 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி முசிறி
முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200  நபர்களுக்கு  இலவசமாக முக  கவசங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு முக  கவசம்  வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
இதற்காக தையல் கலைஞர் ஒருவரை அணுகி சுமார் ஆயிரத்து இருநூறு முக கவசங்களை தங்களது சொந்த செலவில் தயார் செய்து அதனை ஒரு பாலித்தீன் கவரில் போட்டு ,அதனுடன் கொரோனா  வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட அட்டையையும் வைத்து ஒட்டி தா.பேட்டை நியாயவிலை கடைக்கு வந்திருந்த பொதுமக்கள்  மற்றும் தெருக்களில் வீடு வீடாக சென்று முகக் கவசங்கள்  இலவசமாக வழங்கியதோடு சுத்தமாக இருக்கவும், வெளியே வரவேண்டாம் எனவும், முக கவசம் அணிந்து கொள்ளுங்கள் என கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அயல் நாடுகளில் தற்போது முக கவசத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தையல் கலைஞர் உதவியோடு பனியன் துணியில் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கி சலவைத் தொழிலாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த  வரவேற்பை பெற்றுள்ளது
On Monday, April 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி முசிறி

முசிறி அருகே தாங்களாகவே முன்வந்து கிராமத்தை வெளி தொடர்பிலிருந்து தனிமை படுத்திகொண்ட கிராமத்தினர் - சமூக ஆர்வலர்கள் பாராட்டு
 

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களே தங்கள் கிராமத்தை வெளிதொடர்புகளிலிருந்து துண்டித்து தனிமைபடுத்தி கொண்ட சம்பவம் சமூகஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
  முசிறி அருகே மங்கலம்புதூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க வெளியாட்களை கிராமத்திற்குள் வராமல் இருக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கிராமத்திற்கு வரும் இரண்டு பிரதான வாயில்களை தடுப்புகள் அமைத்து அடைத்தனர். பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு,  144 தடை உத்தரவு, அந்நியர்கள் கிராமத்திற்குள் நுழையதடை விதித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் கலக்கி கிருமி நாசினி மருந்தாக கிராமங்களின் தெருக்களில் தெளித்தனர். பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவையும் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சமூகஇடைவெளியை பின்பற்றுமாறு அரசு வலியுறுத்தி வரும் நிலையில் கடைக்கோடி கிராமத்தை சேர்ந்த மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது கிராமத்தை தனிமை படுத்திகொண்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்திஉள்ளது.