Sunday, April 12, 2020

On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வீரமஞ்சன்பட்டி வனப் பகுதியை ஆள் நடமாட்டம் குறித்து
 டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுதல் பரவுவதை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இத்தகைய சூழலில்
ஒரு சிலர் அரசு உத்தரவை மதிக்காமல் வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள துறையூர் வனசரக பகுதிக்கு உட்பட்ட வீரமஞ்சம்பட்டி வனப்பகுதியில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது.
இதற்கு சிலர் அப்பகுதியில் சிகரெட் புகைத்து அப்படியே விட்டுச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் வன பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறித்து டிரோன்  கேமிரா மூலம் கண்காணிக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் முசிறி காவல் சரக  டிஎஸ்பி தலைமையில் வனபகுதியில் ஆட்கள்  நடமாட்டம் குறித்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி நடைபெற்றது. அரசின் உத்தரவை மீறி வன பகுதியில் யாரேனும் சுற்றி வருவது டிரோன் கேமிரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
முசிறியில் கொரோனா விழிப்புணர்வு பணியில் என்.சி.சி மாணவர்கள் -சமூக ஆர்வலர்கள் பாராட்டு
திருச்சி மாவட்டம், முசிறியில் 144 தடை உத்தரவில் போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உதவியாக முசிறி அரசுக்கல்லூரியை சேர்ந்த என்.சி.சி மாணவர்கள் களமிறங்கி உள்ள சம்பவம் சமூகஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்திஉள்ளது.
  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சமூகஇடைவெளியை பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் பொதுஇடங்களில் சுற்றி திரிய கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு விதித்துள்ள சட்ட விதிமுறைகளை பின்பற்ற உதவிடும் வகையில் முசிறி போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து முசிறி அறிஞர் அண்ணா அரசுகலைக்கல்லூரியை சேர்ந்த என்.சி.சி மாணவர்கள் சீருடைஅணிந்து உழவர்சந்தை, முசிறி கைகாட்டி ஆகிய இடங்களில் பணியாற்றினர். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், சமூகஇடைவெளியை பின்பற்றுமாறும், வெளியே வரவேண்டாம் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர். கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் பலரும் உயிர்பயத்தில் உறைந்துள்ள நிலையில் என்.சி.சி மாணவர்கள் சமூகநல ஆர்வத்துடன் பணியாற்றியது சமூகஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
முசிறி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு
  திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரசு டாஸ்மாக் கடைகளிலிருந்த மதுபாட்டில்கள் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
   திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மதுபான கடைகளில் திருட்டு போனது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் பூட்டப்பட்டுள்ளது. இதனால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் மதுபிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு மதுக்கடைகளிலிருந்து மதுபாட்டில்கள் திருட்டுபோவதை தடுக்கும் விதமாக மதுகடைகளிலிருக்கும் மதுபாட்டில்கள் அனைத்தையும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் முசிறி நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, பெட்டவாய்த்தலை, துறையூர், தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவந்த மதுக்கடைகளிலிருந்து எடுத்து வரப்பட்ட மதுபாட்டில்கள் கணக்கிடப்பட்டு பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கிற்கு சீல்வைக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் வாணிபகிடங்கிற்கு எடுத்துசெல்லப்பட்ட சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    

திருச்சி ஏப் 12





திருச்சி சுப்பிரமணியபுரம்  பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த குழந்தைகளின் தந்தை டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பினார்.  கடந்த10 நாட்களுக்கு முன்பு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர்  திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து அவரது மனைவி  தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் திருச்சி எடத்தெரு கீழப்புதூர் பகுதியில் உள்ள  தாயார் வீட்டுக்கு வந்தார். கீழபுதூரில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அங்கு அந்த வீட்டில் மொத்தம் 12 பேர் இருந்துள்ளனர். இதையடுத்து ,12 நபர்களுக்கும் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
 இதில் ஏற்கனவே கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருபவரின் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து இன்று காலை  தாயும், குழந்தையையும் மருத்துவ குழுவின் 108 ஆம்புலென்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் உடனடியாக அப்பகுதி முழுவதும் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினியை தெளித்தனர்.
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 12

கொரோனாவால் சிகிச்சைக்கு அரசு மற்றும் தனியாா் பள்ளி கல்லுாாிகள் தயாா் - 11,135நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சியில் கொரோனாவால்
இது வரை 39 பேர் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா. மேலும் மாவட்டம் முழுவதும் 3045 பேர் வீடுகளில்  தனிமைபடுத்தப்பட்டு கண்கணிக்கப்பில் உள்ளனர். இந்நிலையில் மேலும்  பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு
மற்றும் தனியாா் பள்ளி கல்லுாாிகள் தயாா் நிலைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இதில்  திருச்சி மாவட்டத்தில் 161 அரசு பள்ளி மற்றும் கல்லுாாிகளும்,
59தனியாா் பள்ளி மற்றும் கல்லுாாிகள்  கண்டறியப்பட்டுள்ளன. இந்த 220 அரசு மற்றும் தனியாா் பள்ளி கல்லுாாி கட்டிடங்களில் 4108 அறைகள் உள்ளன. இவற்றில் 2282 அறைகள் (விடுதிகளில் உள்ள) மெத்தை வசதிகளுடன் உள்ளன. 1826 அறைகளில் மெத்தை வசதிகள் இல்லை. இங்கு மெத்தை வசதிகள் ஏற்படுத்திட மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இங்கு 11,135 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீா், கழிப்பீட வசதி உள்ளிட்ட அனைத்தும் அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்ய திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள ஜமால் முகமது என்ற தனியார் கல்லூரியில் ஏற்கனவே 69 பேர் தனிமை படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினரால் கண்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிட்த்தக்கது.
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இதனால் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இருசக்கர வாகனங்களில் மக்கள் வந்து செல்கின்றனர. 

இந்த வகையில் வெறிச்சோடிய சாலைகளில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியர்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்து வருகின்றனர். திருச்சியில் மஞ்சத்திடல் பாலம், பழைய பால் பண்ணை, மண்ணச்சநல்லூர், கோஹினூர் தியேட்டர் ஜங்ஷன், ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.
 இந்த ஓவியத்தை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பார்வையிட்டு ஓவியர்களை பாராட்டி வருகின்றனர்.

 பேட்டி: நாகேந்திரன். ஓவியர்
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
கொரோனா வைரஸ் தாக்குதல் உலகை அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தட்டுப்பாட்டை போக்கும் வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் மலிவு விலை காய்கறி தொகுப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.



 இந்த கூட்டுறவு பண்டகசாலையில் செயல்படுத்தப்படும்  பண்ணை பசுமை காய்கறிகள் திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் காய்கறிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த தொகுப்பில் 14 முதல் 16 வகை  காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதன்மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். வீடு வீடாக சென்று விற்பனை செய்யப்படும் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வீரராகவன், துணைத் தலைவர் ஹேமநாதன் மற்றும் நிர்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனர்.


பேட்டி: வீரராகவன். ஸ்ரீ ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர்.
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி
தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்கவும் மக்களை தொற்று நோயிலிருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது 

                   
ஆதலால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது ஊரடங்கு உத்தரவை மக்கள் பாதிப்படையாமல் இருக்க மதிமுக பொதுச் செயலாளர் அவர்களின் புதல்வன் துரை வைகோ அவர்கள் தலைமையில் குழு அமைத்துள்ளது தமிழகத்தில் உணவு பற்றாக்குறையால் மக்கள் பாதிப்படைய கூடாது என்றும் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இந்த குழுக்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சியில் சென்ற வாரத்தில் 500 பேருக்கு வழங்கப்பட்டது இன்று 300 பேருக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் துரைவைகோ அவர்களின் குழு உறுப்பினரான மருத்துவர் மாநில மகளிர் அணி பொறுப்பாளர் ரொஹையா தலைமையில் உணவு பொருட்கள் வழங்க பட்டது. இந்நிகழ்ச்சியில் மதிமுக கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 11

திருச்சியில் 39ஜ எட்டியது  கொரோனா பாதிப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா
வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி
மாநிலங்களில் இருந்து வருகை புரிந்த 3,045 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி
கண்காணிக்கப்பட்டு
வருகின்றனர்.
அனைவரும்
நல்ல நிலையில்
உள்ளனர்
இவர்களில் 2010நபர்கள்,
28 நாட்களை கடந்து விட்டனர்.
மருத்துவமனையில்
ஏற்கனவே கொரோனா வைரஸ் நோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த  ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்
நேற்று குணமாக மருந்துவமனையிருந்து
வீட்டு சென்றார். தற்போது
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1நபருக்கும், அரியலுூர் மாவட்டத்தை
சார்ந்த 1நபருக்கும்
பெரம்பலூர்
மாவட்டத்தை சார்ந்த
1 நபருக்கும்
திருச்சி மாவட்டத்தை
சேர்ந்த 33 நபருக்கும் உறுதி செய்யப்பட்டு
மேற்கண்ட 36நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களது உடல்
நிலை சீராக நல்ல நிலையில் உள்ளது. மேலும் இன்று கொரோணா தொற்று நோய் அறிகுறியுடன் அனுமதித்தவர்களில்
3பேர்  கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39தாக  உயர்ந்துள்ளது.