Saturday, April 25, 2020
On Saturday, April 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாநகராட்சி சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கப்பட்டது.
திருச்சி தமிழக அரசு ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் தொற்று பரவாமல் இருக்க எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில் கபசுர குடிநீர் தமிழக அரசால் வலியுறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது
On Saturday, April 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் மீது வழக்கா?
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சார்பில் ஊரடங்கால் பாதித்துள்ள ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி உறையூரில் இன்று நடைபெற்றது.
உறையூர் வாத்துக்காரத் தெருவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் 200 பேருக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பெட்ரிக் ராஜ்குமார் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் முத்துகிருஷ்ணன், கலைப் பிரிவு துணைத் தலைவர் பெஞ்சமின் இளங்கோ, அந்தோணியார் தேவாலய பங்குத் தந்தை தாமஸ் ஞானதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த பொருட்களை பெற சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் தேவாலயத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒருவருக்கொருவர் நெருக்கிக் கொண்டும், முண்டியடித்துக்கொண்டும் வரிசையில் நின்றனர். ஏற்கனவே அரசு அலுவலர்கள் முன்னிலையில் தான் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் நிவாரண பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் எந்த அரசு அலுவலர்களும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் கூட்டம் கூடியிருக்கும் தகவல் கிடைத்து உறையூர் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர். எனினும் பொது மக்கள் பலர் முக கவசம் கூட அணியாமலும், சமூக இடைவெளியை பின் பற்றாமலும் வரிசையில் நின்று பொருட்களை பெற்று சென்றதால் பரபரப்பை ஏற்படுத்தியது
On Saturday, April 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
கருப்புகொடியேற்றும்_போராட்டம்!
அனைத்து விவசாய கடனை ரத்து செய்தும், கொரோனா நிவாரண தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும்.. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மாநிலம் முழுவதும் இன்று (25-04-2020) கருப்புகொடி ஏற்றும் போராட்டம்...
திருச்சி, திருவெறும்பூரில்
விவசாய சங்க மாநில து.தலைவர் முகமதலி மற்றும் விவசாய சங்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் K.C. பாண்டியன் ஆகியோரது வீட்டில் கருப்பு கொடியேற்றி அரசிற்கு எதிப்பு தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு ஆதரவாக வீட்டிலிருந்து கருப்புகொடி போராட்டம்...
விவசாயிகளுக்கும் கொரானா பாதிப்பு நிவாரணமாக ரூ.10,000/- நிதி வழங்கிடு
கறுப்புக் கொடியேந்தி போராட்டம்
சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் அனைவருக்கும் கொரானா பாதிப்பு நிவாரணமாக ரூ10,000 வழங்கிடுக
கொரானா நிவாரணப் பணிகளில் மத்திய மாநில அரசுகளின் அலட்சிய போக்கைக் கைவிடுக
அனைத்து விவசாயிகளின் கடன் தவனை வசூலையும் ஒரு வருடத்திற்கு தள்ளிவைத்திடுக
ஏழைக்குடும்பங்கள் அனைவருக்கும் ரூ.5,000/- வழங்கிட வேண்டும்
என கோரிக்கைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
இந்தப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க AIKS சார்பில் கறுப்புக் கொடி ஏந்தி வீட்டிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
On Saturday, April 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை அடிவாரத்தில் குரங்குகளுக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர்கள்.
இந்தியா முழுவதும் கொரோனோ வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதனால் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெருமாள்மலை பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் வருகை ஏதும் இல்லாததால் குரங்குகள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மலையில் இருந்து கீழே இறங்கி வந்த 300க்கும் மேற்பட்ட குரங்குகள் உணவுக்காக குடியிருப்பு பகுதிகளை நோக்கி படை எடுத்து வந்துள்ளன.
இந்நிலையைக் கண்ட துறையூர் பகுதியைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் தற்போது குரங்குகளுக்கு தினமும் உணவு அளித்து வருகின்றனர். வாழைப்பழம் உள்ளிட்ட பல வகைகள் மிக்ஸர் பொறி மற்றும் பல உணவுப் பொருட்களை தினமும் சமூக ஆர்வலர்கள் குரங்குகளுக்கு வழங்கி வருகின்றனர் அதோடு சேர்த்து தண்ணீரின்றி தவிக்கும் குரங்களுக்கு தண்ணீர் எடுத்துச் சென்று அங்கு உள்ள குரங்குகளுக்கு வழங்குகின்றனர்.
On Saturday, April 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*தொடர் மக்கள் சேவையில் அரசு சித்த மருத்துவர்கள்*
- தமிழ்நாடு அரசின் "ஆரோக்கியம்" திட்டத்தின் கீழ் கபசுர குடிநீர் இன்று மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர்.சா.காமராஜ் அவர்கள் தலைமையில் திருச்சி , வயலூர் சாலை, குமரன் நகர்,சிவன் கோவில் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்கபட்டது.இதில் மருத்துவர்கள் டாக்டர்.தமிழ்க்கனி, டாக்டர்.மெர்லின் டோரோ, டாக்டர்.இசையமுது ஆகியோர் பங்கு பெற்றனர். நிகழ்வில் டாக்டர் அப்துல் கலாம் பொது நலச் சங்கத் தலைவர் சச்சிதானந்தம்,செயலர்.சப்தரிஷி முருகானந்தம்,ஆலோசகர் சுந்தரம் செட்டி யார் ,பொருளாளர்.ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இன்று மாலை திருச்சி ,கீழபுலிவார் ரோடு ,ஆனந்தா அவென்யூ பூங்காவில் இதே போன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Friday, April 24, 2020
On Friday, April 24, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி -
திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் நடவடிக்கை
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை புதைக்க சென்னையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதைத் தொடர்ந்து மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க காவல் துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன்அதன்படி, மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த திருச்சி சரகத்திற்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 19 காவல் உட்கோட்டங்களில் அந்தந்த காவல் துணைக் கண்காணிப்பாளர்களை 'குழு நிர்வாகியாக' நியமித்து மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த துணைப் பணியாளர்கள் அடங்கிய ஒரு ’வாட்ஸ் அப்’ குழு தொடங்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளரும் ஒரு உறுப்பினராவர்.தூய்மைப் பணியாளர்களுக்கென 66 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் அந்தந்த ஆய்வாளர்களைக் 'குழு நிர்வாகியாக' நியமித்து வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டுள்ளது.மேற்கண்டவர்களுக்கு ஏதாவது பிரச்னைகள் இருந்தால் இந்தக் குழுவில் உள்ள காவல் அலுவலர்கள் மூலம் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த துணை பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் வசிக்கும் இடங்களை டிஜிட்டல் வரைபடம் மூலம் ஒன்றிணைத்து அவர்களை இ.பீட் (E.Beat) முறையின் மூலம் காவலர்களை கொண்டு பாதுகாப்பு அளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Thursday, April 23, 2020
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது?
24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்தால் முழுமையாக வங்கியில்பணம் கட்டியிருக்க வேண்டும்
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளது 24.3.2020 .ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு காரணமாக கடைகள் 6 மணிக்கு மூடப்பட்டதால் டாஸ்மாக் மதுபானங்கள் அதிகமாக விற்பனையானது விற்பனையான பணம் அதற்கு அடுத்த நாள் வங்கிகள் 25 தேதி தெலுங்கு வருட பிறப்பு வங்கிகள் விடுமுறை. அதற்கு மறுநாள் 26 ஆம் தேதி வங்கியில் பணம் கட்டினார்கள். ஆனால் மதுபானங்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காரணமாக பாதுகாப்பான இடத்திற்கு டாஸ்மாக் மதுபானங்களை திருச்சியில் உள்ள திருச்சி துவாக்குடி மதுபான குடோன்.. கலையரங்கம் தியேட்டர்.,தேவர்ஹால். முசிறி டி என் சி குடோன் . மணப்பாறையில் உள்ள கல்யாண மண்டபம். திருச்சி உள்ள சுமார் 174 கடைகளை சரக்குகள் பாதுகாக்கப்பட்டுள்ளது .அரசே மதுபானங்களை எடுத்து வருவதற்காக ஒப்பந்த ஊர்தி எடுத்து வருவதற்கு அரசாங்கம் வாடகை தரவில்லையாம் தமிழகம் முழுவதும் பணியாளர்களே வாடகை கொடுத்து இருக்கிறார்கள் வாடகை என்பது வண்டி வாடகை மற்றும் சரக்குகளை ஏற்றுவதற்கு ஒரு கூலி இறக்குவதற்கு ஒரு கூலி அனைத்தையும் பணியாளர்களை கொடுத்திருக்கிறார்கள் அரசாங்கம் இதுவரை வண்டி வாடகை தரவில்லை. திருச்சி மாவட்டத்தில் வாடகை என்பது முதன்முதலாக சரக்கு எடுத்த கடைகளுக்கு 25 ரூபாய் என்றும் அதன் பிறகு எடுத்த கடைகளுக்கு 20 ரூபாய் என்றும் கடைகளில் டாஸ்மார்க் ஒப்பந்த வண்டி காரர்களே முடிவு செய்து டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பணத்தை பெற்றுக்கொண்டனர் இந்த தவறை திருச்சி மாவட்ட மேலாளரிடம் எடுத்து சொல்லியும் எந்த பலனும் இல்லை டாஸ்மார்க் ஒப்பந்த வண்டி காரர்களிடம் இடமிருந்து கமிஷன் பெறுகிறார் திருச்சி மாவட்ட மேலாளர். வாடகை ஒப்பந்த வண்டியின் சூப்பர்வைசர் இஸ்மாயில் என்பவர் இவர் ஆளும் கட்சிக்கு உடன் தொடர்பு உடையவர் இவரை திருச்சி மாவட்ட மேலாளர் பகைத்துக்கொள்ள மாட்டாராம் இவருக்கு அலுவலகத்தில் உள்ள டெம்போ மேனேஜர் ஜெயப்பிரகாஷ் (தாசில்தார்) மற்றும் அலுவலக பணியாளர் தியாகராஜன் சரக்கு பில் அடிப்பவர் டாஸ்மார்க் கடை சூப்பர்வைசர் ஜெயபிரகாஷ, இவர்கள் இஸ்மாயிலுக்கு உடந்தை ஆதலால் பணியாளர்களை தொடர்ச்சியாக மிரட்டி வருகிறாராம் இந்த இஸ்மாயில் பணியாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை மேலும் எந்த கடைக்கு எவ்வளவு சரக்கு வேண்டும் என்பது நிர்ணயம் செய்வது டாஸ்மார்க் கடை சூப்பர்வைசர் ஜெயப்பிரகாஷ் இஸ்மாயிலும் மற்றும் சூப்பர்வைசர் ஜெயபிரகாஷ் மனைவியும் சேர்ந்து மதுபான பெட்டியின் கணக்கு எண்ணிக்கையை வீட்டில் பில் அடிப்பார்களாம் அப்படிப் பில் அடிப்பது சட்டத்துக்கு புறம்பானது என்று தெரிந்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லையாம். இதை யாரும் கேட்க முடியாது ஊழல் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது? சரக்குகளை மாற்று இடத்துக்கு கொண்டு வரும்பொழுது தணிக்கை(auditing) செய்கிறார்கள் தணிக்கையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் சுமார் 1000 ஆயிரத்திலிருந்து பல லட்சம் வரை வித்தியாசம் வருகிறது துறையூருக்கு அருகில் உள்ள ஆதனூர் கடையில் சரக்குகளே இல்லை அனைத்தும் பிளாக்கில் விற்கப்பட்டுள்ளன.
இது அனைத்தும் மாவட்ட மேலாளர் வெளியிடவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை ?
பணியாளர்களிடம் கடிதம் பெற்றுக்கொண்டு தவறு செய்யும் நபர்களை பாதுகாத்து வருகிறார் அதன் படி அரசியல் தலைவர்களும் உடந்தையாக இருக்கிறார்களா? பார் எடுக்கும் அரசியல்வாதிகள் தான் பணியாளர்களை மிரட்டுகிறார்களாம்
திருச்சி மாவட்டத்தில் அதிகமாக சரக்கு வெளியில் வர காரணம் மாவட்ட மேலாளர் வண்டி வாடகை தராததால் பணியாளர்களே வண்டிக்கு வாடகை தருவதற்கு சரக்குகளை பணியாளர்களே
வெளியே மதுபானங்களைவிற்கிறார்களாம் காவலுக்கு வரும் காவல்துறையினரும் சரக்குகளை வாங்கிக் கொள்கிறார்களாம். இப்படிப்பட்ட அவல நிலையில் பணியாளர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது வருத்தத்திற்குறிய விஷயமாக உள்ளது. சரக்குகளைப் பாதுகாப்பதற்கு பணியாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இப்படி சரக்குகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு கொரோனவில் இறந்தாலும் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டாலும் மன அழுத்தத்தால் இயற்கையாக இறந்தாலும் பணியாளர்களின் நிலை மிகவும் மோசமாகத்தான் உள்ளது இப்படி நிலை நீடித்தால் வருங்காலத்தில் என்ன தான் தீர்வு?

சமீபத்தில் திருச்சி கலையரங்கத்தில் மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் இருந்து மதுபானங்களை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது . இந்த மதுபானங்களை சூப்பர்வைசர்கள் சிலர் கள்ளத்தனமாக மது பாட்டில்களை எடுத்து வந்து மது அருந்தி உள்ளனர் இந்த விஷயம் மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இவர்கள் எந்த இடத்தில் 8 பேரும் மது அருந்தி உள்ளனர் என்றும் அருந்திய பிராண்டும் மேலாலருக்கு தெரியுமாம்.
ஆனால் அவர்களை எச்சரித்து மட்டும் விட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது உள்ளே பேரம் பேசப் பட்டதா என்று தெரியவில்லை? சில பத்திரிக்கை ஊடகவியாளர்கள் அந்த எட்டு பேர் சரக்கு அடிப்பதை போட்டோ வீடியோ எடுத்து வைத்து பேரம் பேசப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த சூப்பர்வைசர் மன உளைச்சலில் மாரடைப்பினால் இறந்துள்ளார் உண்மை என்ன நடந்தது என்ற விசாரணையை காவல்துறை அதிகாரிகள் தான் விசாரிக்க வேண்டும்

இப்படி ஊழல் செய்தவர்களை அழைத்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மணப்பாறை தாலுகா உள்ள ஒரு கடையில் இருப்பு சரி பார்த்ததில் 7 லட்சம் வரை மதுபான பாட்டில்கள் கணக்கில் காணவில்லை என்பதும் மேலும் திருச்சி துவாக்குடி ஒரு பகுதியில் உள்ள கடையில் 7 லட்சம் வரை மதுபான பாட்டில்கள் கணக்கில் காணவில்லை என்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது?

On Thursday, April 23, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா உணவகத்தில் இலவச உணவு - துவக்கி வைத்து அமைச்சர் 1.50 லட்சம் நிதி வழங்கினார்.
தமிழகம் முழுவதும் கொரனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை வரும் மே மாதம் 3ம் தேதி அரசு அறிவித்துள்ளது.
இந்நாட்களில் ஏழை எளிய மக்கள் உணவுக்கு அவதிப்படும் நிலையை கருத்தில் கொண்டு அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வெல்லமண்டி நடராஜன்
திருச்சி கிழக்கு சட்டமன்றத்திற்குட்பட்ட 7அம்மா உணவகத்திலும் காலை, மதியம் மற்றும் இரவு, மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து அதற்காக ரூபாய் 1.50லட்சத்துக்கான காசோலையை .
மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணிடத்தில்
வழங்கினார்.
கடந்த 2 நாட்கள் க்கு முன்பு 300 மூட்டை அரிசி அம்மா உணவகத்திற்காக வழங்கியது அடுத்து இன்று இதர மிளக பொருட்கள் மற்றும் காய்கறி வாங்குவதற்கான இத்தொகையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் வரையில் தினந்தோறும் அனைத்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க அறிவுறுத்தி உள்ளேன். இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா உணவகத்தில் இலவச உணவு - துவக்கி வைத்து அமைச்சர் 1.50 லட்சம் நிதி வழங்கினார்.
தமிழகம் முழுவதும் கொரனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை வரும் மே மாதம் 3ம் தேதி அரசு அறிவித்துள்ளது.
திருச்சி கிழக்கு சட்டமன்றத்திற்குட்பட்ட 7அம்மா உணவகத்திலும் காலை, மதியம் மற்றும் இரவு, மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து அதற்காக ரூபாய் 1.50லட்சத்துக்கான காசோலையை .
மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணிடத்தில்
வழங்கினார்.
கடந்த 2 நாட்கள் க்கு முன்பு 300 மூட்டை அரிசி அம்மா உணவகத்திற்காக வழங்கியது அடுத்து இன்று இதர மிளக பொருட்கள் மற்றும் காய்கறி வாங்குவதற்கான இத்தொகையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் வரையில் தினந்தோறும் அனைத்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க அறிவுறுத்தி உள்ளேன். இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Wednesday, April 22, 2020
On Wednesday, April 22, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி
திருச்சியில் காவல்துறை அதிகாரிகளால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எளிமையான புரிந்து கொள்ளும் தன்மையுடன் வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் மக்களிடையே காவல்துறையினர் பணிகள் சமூக இடைவெளி விழிப்புணர்வு போன்றவைகளை வீடியோவில் பதிவிட்டு உள்ளது.
இது போன்ற நிகழ்வுகள் பொதுமக்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
திருச்சி காவல்துறை மிக்க நன்றி
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...