Thursday, May 14, 2020

On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 13

திருச்சியை  சேர்ந்த 
9பேர் பேருந்து மூலம் 
மகாராஷ்ட்ராவிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமா வெளிமாநிலங்களில் இருக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு  திரும்ப முடியாமல் அவதியுற்று வந்தனர். இதே போல் தமிழர்களும் சொந்த ஊருக்கு வர முடியவில்லை. இந்நிலையில் மத்திய அரசு  அவர்களை சொந்த ஊருக்கு  அனுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலத்தில் பணிபுரியம் தமிழகத்தில் திருச்சி, நாகப்பட்டினம். தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை   
சேர்ந்த  



29தொழிலாளர்கள் பேருந்து மூலம்  தமிழ்நாடு எல்லையான ஓசூர் வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள்
பேருந்து மூலம் இன்று காலை திருச்சி வந்தனர். அவர்களில்
திருச்சி பாலக்கரை, திருவெறும்பூர், மணப்பாறை, மற்றும் துறையூர் பகுதிகளை 
சேர்ந்த 9 நபர்கள் திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் இறக்கி விடப்பட்டு பின்னர் தஞ்சை,  திருவாரூர், செல்லும்  நபர்கள் பேருந்து மூலம் சென்றனர். இந்நிலையில் திருச்சியில் இறக்கி விடப்பட்ட  
9நபர்களுக்கும் மருத்துவர்கள் 
தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர்  அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொரனா வைரஸ் நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனை செய்வதற்காக
அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள்  பரிசோதனை செய்த  பின்னர் 14 முதல் 20 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்ட பின்பு அவர்கள் வீடுகளுக்கு  அனுப்பப்படுவார்கள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு 


திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிபதிகள் சார்பில் ரூபாய் ஓரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் தலா 10 கிலோ அரிசி இரண்டு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ பச்சை பயிறு ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ஒரு கிலோ பாசிப் பருப்பு ஒரு கிலோ கோதுமை மாவு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஒரு கிலோ உப்பு ஒரு கிலோ சர்க்கரை 200 கிராம் மல்லித்தூள் 200 கிராம் மிளகாய்த்தூள் 200 கிராம் டீத்தூள் 200 கிராம் மஞ்சள் தூள் போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தலா ரூபாய் 1250 மதிப்பீட்டில் 264 துப்புரவுத் தொழிலாளர் பணியாளர்களுக்கு 

திருச்சிராப்பள்ளி முதன்மை மாவட்ட நீதிபதி முரளி சங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு ஆகிய அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மளிகை பொருட்களை வழங்கினார்கள் மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அனிதா மருந்து கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் இருந்தனர்
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
முகக் கவசம் அணியவில்லை

சமூக இடைவெளி கடைபிடிடக்கப்படவில்லை


மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வேதனை


 திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தியில்
                 
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  இன்று  பெரும்பாலும் கடைகள் திறந்த நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றும் பழக்கம்  முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை  

ஓலிபெருக்கி மூலம் இது குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தினாலும் அதன் தாக்கம் எதிர்பார்த்த அளவு இல்லை
               
  எனவே, அனைத்து கடைகள் ( இறைச்சிக்கடைகள் உள்பட) மற்றும் வணிக நிலையங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதல் குறித்தான விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும்
              
இது ஊரடங்கு நிபந்தனைகளின்படி சமூக இடைவெளி பின்பற்றுவதற்கான ஒரு முயற்சியாகும்

 இனி வரும் காலங்களில்  வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமலும் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாமலும் வணிகம் செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

இவ்வாறு   மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன்   தெரிவித்துள்ளார்
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில்
முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு 100 ரூபாய் அபராதம்.
நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.


திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிப் பகுதியைப் பொறுத்தவரை கொரோனா தொற்று இல்லாத பகுதியாக விளங்கி வருவதுடன் அதற்கான தடுப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி அவசியம் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதோடு நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வகையில் மணப்பாறையில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு வகையான வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை நிறுத்தி அபாராதம் விதித்தனர். இதுமட்டுமின்றி பலருக்கும் முகக்கவசம் வழங்கியதோடு, சிலருக்கு அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.
கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் இதுபோன்று நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில்
காசநோய், தொழுநோய் உள்ளிட்ட பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுப் பொருட்கள்.
மருத்துவத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா ஊரடங்காக இந்த கால கட்டத்தில் காசநோய், தொழுநோய், ஆட்கொல்லி நோய் உள்ளிட்டவைகளுக்கு சிகிக்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களும் வழங்கப்பட்டது. மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உணவுப் பொருட்களை வழங்கினர்.
இதே போல் மணப்பாறை பகுதியில் கொரோனா முடக்கத்தால் வீடுகளுக்குள் முடங்கி உள்ள தப்பாட்ட கலைஞர்களுக்கு தாசில்தார் தமிழ்கனி அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட மளிகை பொருட்களையும் வழங்கினார்.
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் 

மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி. வைதேகி மற்றும் ஆசிரியர்கள் சார்பாக வழங்கப்பட்டது.   மேலும் பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகி திரு.ஜெயகுமார் கலந்து கொண்டார்.
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
DYFI சார்பில் அரசாணை51ஐரத்துசெய்ய வயிற்றில் ஈரத் துணிகட்டி போராட்டம்
திருச்சி மாநகரில் (DYFI)  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதினை 58லிருந்து 59 ஆக உயர்த்தியதை திரும்ப பெற கோரியும்

விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற அதிமுக நிர்வாகிகள் மீது கடுமையான தண்டனை வழங்கிட கோரியும் மாநிலம் முழுவதும் வயிற்றில் ஈர துணி கட்டி முழக்கமிடும் போராட்டம் நடைபெற்றது.
அதனொரு பகுதியாக திருவெறும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் பா.லெனின் DYFl மாநகர் மாவட்ட செயலாளர் தலைமையிலும்
பாலக்கரை பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் S.சுரேஷ் மாநகர் மாவட்ட தலைவர் தலைமையிலும் கீழ்புதூரில் நடைபெற்ற போராட்டத்தில் பகுதி செயலாளர் இரட்டமலை தலைமையிலும் நடைபெற்றது.

Tuesday, May 12, 2020

On Tuesday, May 12, 2020 by Tamilnewstv in    
சமயபுரத்தில் அதிமுக சார்பாக 500 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது..!

கொரோனாவின் நோய் தொற்று பரவல் காரணமாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது, 


 
இதனால் மக்களுக்கு அன்றாட பொருட்களை பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் நிவாரணங்களை வழங்கி வருகின்றன, தமிழகத்தில் அதிமுக சார்பாக பல்வேறு இடங்களில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது தற்பொழுது சமயபுரம் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் சார்பாக சமயபுரம் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது, 


 வார்டு வாரியாக சுமார் 500 பேருக்கு இன்று வழங்கப்பட்டது, இதில் 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் ஆகியவை அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது, நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்கு முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் கொடுக்கப்பட்டது ,மக்கள் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

 இந்நிகழ்வில் சமயபுரம் பேரூராட்சி  தலைவர் சின்னையன், நகர செயலாளர் சம்பத்குமார், நகரத் துணைச் செயலாளர் மனோகரன், ராஜேந்திரன், மணிகண்டன், மணிராஜ், குப்புசாமி, கண்ணன், வேல்முருகன் மற்றும் நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Sunday, May 10, 2020

On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி

  கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகளாவிய பூட்டுதல் காரணமாக மலேசியாவில் தவித்த 177 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் திருச்சி அழைத்துவரப்பட்டனர்.

 கொரோனா பாதிப்பினால் உலகளவில் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அனைத்துவிதமான விமான சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

 அதனால் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த பலர் திரும்பிச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இதனால் அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்ப கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது.இந்த வகையில் மலேசியாவிலிருந்து திருச்சி வந்த சுமார் 400 பயணிகள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

 இந்நிலையில் மலேசியாவில் தவித்துவந்த 177 தமிழர்களை மீட்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இன்று ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் அவர்களை அழைத்துவருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, 177 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் நேற்று (மே 9) இரவு 10.15 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. 

  திருச்சி வந்தடைந்த அவர்களுக்கு விமான நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இந்தப் பரிசோதனை பணியை நேரில் பார்வையிட்டார்.

 தவித்த 177 தமிழர்கள் திருச்சி வந்தடைந்தனர்அனைத்து பயணிகளும் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே நகரத்திற்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவ்வாறு வந்த பயணிகளில் யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை. 

 எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 40 நாள்களுக்கு மேலாக மலேசியாவில் தவித்துவந்த இவர்கள் தமிழ்நாடு திரும்பியிருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்