Monday, June 01, 2020
On Monday, June 01, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மணப்பாறையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய மின்ஊழியர்களின் எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிப்பதை முன்னிட்டு மின்வாரிய ஊழியர்கள் அனைத்து மின்வாரிய அலுவலகங்களின் முன்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மின் துறையை தனியார் மயமாக்க கூடாது. 2020 மின்சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் தொழிலாளரின் உரிமையை பறிக்கக்கூடாது, மின் வாரியங்கள் பிரிக்கக் கூடாது, விவசாயம், குடிசை, நெசவு போன்றவைகளுக்கு சமூக அக்கறையுடன் செயல்படுத்தி வரும் மானிய திட்டங்களை வழங்கி வரும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
On Monday, June 01, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஜூன் 1
திருச்சியில்
விவசாயிகள்
சங்கத்தினர் போராட்டம்.
தமிழக விவசாயிகள் சங்கம், பொதுநல அமைப்புகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பட்டத்திற்கு
தமிழக விவசாயிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு
உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு காவிரி பாசன உரிமையில் தமிழகத்தை வஞ்சித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகார செயல்பாட்டை முடக்கி மத்திய அரசின் நீர் ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் கட்டுப்பாட்டில் செயல்படும்
கீழமை ஆணையமாக
மாற்றி அவசர சட்டம் பிறப்பித்தது ரத்து செய்யும் வலியுறுத்தியும், மேலும் மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்து தனியாரிடம் மின் திட்டங்களை ஒப்படைத்து மாநில உரிமைகளை பறிப்பது கைவிட்டு அச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர்.
பேட்டி : சின்னதுரை
தமிழக விவசாயிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவர்.
திருச்சியில்
விவசாயிகள்
சங்கத்தினர் போராட்டம்.
தமிழக விவசாயிகள் சங்கம், பொதுநல அமைப்புகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பட்டத்திற்கு
தமிழக விவசாயிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு
உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு காவிரி பாசன உரிமையில் தமிழகத்தை வஞ்சித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகார செயல்பாட்டை முடக்கி மத்திய அரசின் நீர் ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் கட்டுப்பாட்டில் செயல்படும்
கீழமை ஆணையமாக
மாற்றி அவசர சட்டம் பிறப்பித்தது ரத்து செய்யும் வலியுறுத்தியும், மேலும் மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்து தனியாரிடம் மின் திட்டங்களை ஒப்படைத்து மாநில உரிமைகளை பறிப்பது கைவிட்டு அச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர்.
பேட்டி : சின்னதுரை
தமிழக விவசாயிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவர்.
On Monday, June 01, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 36 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனா தடை உத்தரவு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன.
இதையடுத்து இன்று முதல் பேருந்துகள் இயக்க படலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 28 புறநகர் பேருந்துகளும் 8 நகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கையுறை மற்றும் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டனர். மேலும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு சனிடைசர் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பேருந்தும் பேருந்து நிலையம் வரும் பொழுது கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு இயக்கப்பட்டன. இன்று முதல் நாள் என்பதால் பயணிகள் குறைவாகவே காணப்பட்டனர். நாளடைவில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும் துறையூர் பகுதிகளில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.
On Monday, June 01, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ
சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலகத்திற்கு வெளிப்படுத்தும் நிரூபர் சபரிநாதனையும் கொலை செய்தே தீருவோம் எல்பின் நிறுவனர்கள் ஆவேசம்
சில நாட்களுக்கு முன்பு தஞ்சை காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக எல்பின் நிறுவனர் ராஜா என்கிற அழகர்சாமி ஆடியோ வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம்
Sunday, May 31, 2020
On Sunday, May 31, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
- திருச்சி கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட டாஸ்மார்க் கடையில் திருட்டு 357360 ரூபாய் திருடபட்டுள்ளதாக கூறப்படுகிறது
திருச்சி மாநகரம் கோட்டை காவல் சரகம் கரூர் சாலையில் உள்ள தாஜ் கல்யாண மண்டபம் எதிரில் உள்ள அரசு மதுபான கடை எண் 10304 இன்று காலை 9.45 மணி அளவில் அதன் சூப்பர்வைசர் முருகன் வயது 50 தந்தை பெயர் சண்முகம் 3வது குறுக்கு தெரு சீனிவாச நகர் வயலூர் ரோடு திருச்சி என்பவரும் விற்பனையாளர்கள் கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோர் திறக்க வரும்பொழுது ஏற்கனவே கடையின் முன்புறம் உள்ள ஷட்டர் இன் 20 இல்லாமலும் உட்புறம் இருந்த கம்பியினால் ஆன கேட்டும் திறக்கப்பட்டு இருந்துள்ளது மேற்படி நபர்கள் உள்ளே சென்று பார்த்த பொழுது முதல் நாள் வசூல் ஆன ரூபாய் 3 லட்சத்து 54 ஆயிரம் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது.
உடனடியாக கோட்டை காவல் நிலைய குற்றப் பிரிவுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் மேற்படி சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர் கடையில் இருந்த முன்புற 3 பூட்டுகளும் காணாமல் போயுள்ளது காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு உறையூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மார்க் கடையில் திருட்டு போனது என்பது குறிப்பிடத்தக்கது
On Sunday, May 31, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சியில் மீண்டும் வாழ்வாதாரத்தை துவக்கியுள்ள தனது சட்டமன்ற தொகுதியில் உள்ள பொது மக்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பு மற்றும் நிதியுதவியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கி வருகிறார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகளால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது
அதன் ஒரு பகுதியாக
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர்
வெல்லமண்டி நடராஜன் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு இலவச உணவு வழங்கினார்
கங்காரு கருணை இல்லத்தினை பார்வையிட்டார்.உடன் சாய் கோகுலம் தொண்டு நிறுவனம் சார்பாக 300 பொட்டலங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.
அமைச்சரிடம் கருணை இல்ல பயனாளிகளுக்கு தேவைப்படும் அடிப்படை *மருத்துவ வசதிகள்,*
கட்டணமின்றி தகனம் செய்ய மின்மயான அனுமதி மற்றும்
திருச்சிராப்பள்ளி சாலையோரங்களில் இருந்து மீட்கப்படும் நபர்கள் (1000 பேர் வரை தங்க வைக்கும்)
பராமரிப்பு கட்டிடம் கட்டுவதற்கான அரசுக்கு சொந்தமான நிலம் வேண்டும் என்ற கோரிக்கை மனு அமைச்சரிடம் வழங்கப்பட்டது
முதியோர் இல்ல பயனாளிகள் சார்பாக கொடுக்கப்பட்டது.கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் உறுதி அளித்துள்ளார்
இந்நிகழ்ச்சியில் அதிமுக பகுதி கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
On Sunday, May 31, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி முசிறி
சென்னையிலிருந்து வந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு அறிகுறி
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மருதம்பட்டி என்ற கிராமத்திற்கு சென்னையிலிருந்து வந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு அறிகுறி தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொட்டியம் தாலுகா, மருதம்பட்டியைச் சேர்ந்தவர் சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 25ஆம் தேதி சென்னையில் இருந்து மருதம்பட்டிக்கு வந்துள்ளருக்கு காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு இன்று வந்ததில் தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் அந்த நபரை உரிய பாதுகாப்புடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சுகாதார குழுவினர் அவர் வசித்த தெருக்களை சுத்தப்படுத்தி ,கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.
Saturday, May 30, 2020
On Saturday, May 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து இண்டிகோ சிறப்பு விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த 77 பயணிகளை கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணி முன்னெச்சரிக்கையாக
சுகாதாரத் துறையின் மூலம் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அறிகுறி உள்ளதா என திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று 30.05. 2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
On Saturday, May 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 30
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர்
கூறுகையில்
தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடனுதவி முக்கியமல்ல அவர்களுக்கு நிவாரணத் தொகை மட்டுமே முக்கியம். எனவே, மத்திய அரசு சார்பாக ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூபாய் பத்தாயிரம் அதே போல்
மாநில அரசு சார்பாக 7500ரூபாய் வழங்க வேண்டும். அதுதான் இப்போது தற்காலிக தீர்வு ஆகும் என்றார்.
மேலும்
நேரு செய்த சாதனைகளையும் காமராஜர் அவர்கள் செய்த சாதனைகள் சொல்வதற்கு நிறைய இருக்கிறது ஆனால் ஆறு ஆண்டுகளாக மோடி பிரதமராக இருந்தபோது செய்த சாதனைகள் என்று எதுவுமே இல்லை பணமதிப்பிழப்பு மக்கள் அவதிப்பட்டது தான் அவர் ஆட்சியில் கண்ட பலன்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணையை விரைவில் முடித்து அவர் இயற்கை மரணம் அடைந்தாரா கொலை செய்யப்பட்டாரா என்ன நடந்தது என்பதை உடனடியாக வெளியிட வேண்டும் அத்துடன் ஜெயலலிதாவிற்காக தமிழகம் முழுக்க அவருக்கான சொத்து எவ்வளவு என்பது குறித்து தனியாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து வெளியிட வேண்டும் ஜெயலலிதாவின் சினிமா மூலம் வந்த வருமானத்தை வாரிசுதாரர்களுக்கும் மற்றும் அவர் ஆட்சியின் போது தவறான வழிகளில் சம்பாதித்த பணத்தை நாட்டுடமையாக்க வேண்டும் என கூறினார்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...









