Sunday, August 24, 2014

On Sunday, August 24, 2014 by farook press in ,    
திருப்பூரில் மசானிக் சங்கம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அகில இந்திய தலைவர் வாசுதேவ் ஜம்நாபிகார் மசுரேக்கர் அடிக்கல் நாட்டினார். 
மசானிக் சங்கமானது இந்திய மற்றும் அல்லது உலகம் முழுவதும் உள்ளது. இந்த சங்கம் சார்பில் பல்வேறு மக்கள் பணிகள் செய்யபட்டு வருகின்றனர்.திருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சைபர் கிரைம் விழிப்புணர்வு முகாம், கணபதிபாளையம் வி.ஏ.டி.ட்ரஸ்டுடன்  இணைந்து இலவச இருதய நோய் பரிசோதனை முகாம், பள்ளி மாணவர்களுக்கு தேவையான டெஸ்க். டேபிள்,சேர் போன்ற பல்வேறு நலப்பன்களை செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி முருகம்பாளையம் ரிங் ரோட்டில் ரூ.40 லட்சம் மதிப்பில் திருப்பூர் மசானிக் சங்கம் எண்.324 க்கான புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் தென் இந்திய மசானிக் தலைவர் ஏ.பி.சித்ரா வரவேற்று பேசினார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அகில இந்திய மசானிக் இயக்கத்தின் தலைவர் வாசுதேவ் ஜம்நாபிகார் மசுரேக்கர் கலந்து கொண்டு முறைப்படி அடிக்கல் நாட்டி சிரபுரையாய்ற்றினார்.தென் இந்திய மசானிக் தலைவர் ஏ.பி.சித்ரா வாழ்த்தி பேசினார். முன்னதாக திருப்பூர் மசானிக் சங்கத் தலைவர் வி.வரதராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் பகுதி சங்க செயலாளர் ஏ.பாலசுப்பிரமணியம், டி.எஸ்.சாமிநாதன்,தொழில் அதிபர் கே.பி.கே.செல்வராஜ், ஆடிட்டர் செல்வராஜ்,ஜெகநாதன், சாமியப்பன், செந்தில், சிவகுமார், முத்துசாமி,டாக்டர்கள் கணேஷ்,மணி, திருமலைசாமி மற்றும் அனைத்து இந்தியாவிலிருந்து இந்த இயக்கத்தின் பல்வேறு அங்கத்தினர்களும், திருப்பூர் நகர் பிரமுகர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முடிவில் அகில இந்திய மசானிக் சங்க பொது செயலாளர் காம்கோடி நன்றி கூறினார்.

0 comments: