Friday, August 15, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.எம்.ஜி.ஆர்.இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மா நகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:--
கழக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள அலெக்சாண்டர் தமிழகத்தில் உள்ள 52 மாவட்டத்திலும் சுற்றுபயணம் செய்து இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.வருகிற 17-ம் தேதி திருப்பூரில் மாவட்ட இளைஞரணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது
திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையை செயல்படுத் துவதில் எந்த அணியை எடுத்துக்கொண்டலும் எப்போதும் தமிழகத்தில் முதலிடத்தில் இருக்கிறோம். வருகிற கூட்டத்திலும் மாநில அளவில் வியக்கும் வியர்க்கும் வகையில் இந்த ஆலோசனை கூட்டம் அமைய வேண்டும். இதற்காக அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா தெருமுனை கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனை விளக்க நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டுள்ளார். அவரின் ஆலோசனையால்தான் நாடாளுமன்ற தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்று இருக்கிறோம்.
அண்ணா தி.மு.க., நிர்வாகிகள் தினந்தோறும் மக்களை சந்தித்து பணியாற்ற வேண்டும். தினமும் ஜெயலலிதா அறிவிக்கும் திட்டங்களை மக்களிடம் சென்றடைய செய்வது நிர்வாகிகள் பொறுப்பு. ஒவ்வொரு அணிகளின் சார்பாக வாரம் தோறும் தெருமுனை கூட்டம்; அம்மா பேரவை சார்பில் 100 வாரம் மக்கள் முகாம் எனவும், எம்.ஜி. ஆர் மன்றம் சார்பில் மாதம் ஒரு பொதுக்கூட்டம் என 66 வரம் நடைபெறுகிறது. மகளிரணி சார்பில் கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிரணி கூட்டங்களுக்காக 8 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக திருப்பூர் மேயர் விசாலாட்சி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இப்படி ஒவ்வொரு அணியின் சார்பாக கூட்டங்கள் நடத்தி மக்களிடம் அண்ணா தி.மு.க.அரசின் நலத்திட்டங்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.இதற்காக தான் எம்.ஜி.ஆர் இளைஞரணி கூட்டமும் நடக்கிறது. இதில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவில்மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களை திரட்டி வர வேண்டும். இதற்காக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தலா 500 பேரை அழைத்து வர வேண்டும். திருப்பூர் மாநகர் மாவட்டம் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் முதன்மை மாவட்டமாக திக வேண்டும். முதல்வர் ஜெயலலிதா மாகத்தான திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கி கொண்டு இருக்கிறார்.நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்து விட்டோம் என இருந்து விடாமல் தொடர்ந்து மக்கள் பணிகளை தொடர வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
மகளிர் அணி மாநில செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி பேசியதாவது:-
சென்ற முறை இளைஞர் அணி சார்பில் 25 வாரங்கள் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றதை நாம் மறந்து இருக்க முடியாது.37 நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்து விட்டோம் என வீட்டில் இருந்து விடாமல் வரும் காலங்களில் தீவிரமாக செயல்பட்டால் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அண்ணா தி.மு.க.இயக்கம் முழுமையாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எவ்வளவு தூரம் மக்கள் தூக்கி எரிந்தாலும் அவர் ஆவர்கள் சார்ந்துள்ள கட்சியை பொது இடங்களில் பேசாமல் இருப்பதில்லை.நம் இயக்க தொண்டர்கள் எங்கு சென்றாலும், பஸ் நிலையம், ரெயில் நிலையம், டீக்கடை போன்ற மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் ஆட்சியை பற்றியும், முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு வழங்கியுள்ள திட்டங்கள் பற்றியும் பேச வேண்டும். இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி பேசினார்.
கூட்டத்தில், எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராக அலெக்சாண்டர நியமிக்கப்பட்டதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், அவரது பணிகள் சிறக்க வாழ்த்தியும், வருகிற ஞாயிறன்று நடைபெறும் இளைஞரணி கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டு சிறப்பிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், வடக்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், பேரவை மாவட்ட செயலாளர் வி.ராதாகிருஷ்ணன்,எம்.கண்ணப்பன் , கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, சோமசுந்தரம், ஏ.ஸ்டீபன் ராஜ், கருனாங்கரன், விஜயகுமார், மாவட்ட பேரவை நிர்வாகிகள் அட்லஸ் சி.லோகநாதன், உஷா ரவிகுமார், எஸ்.பி.என். பழனிசாமி, மாரிமுத்து, இளைஞர் அணி நிர்வாகிகள் எம்.ஹரிஹரசுதன் , கே.பி.ஜி.மகேஸ்ராம், சாகுல் ஹமீது, தாமோதரன், அசோக்குமார், ராஜ்குமார், நீதிராஜன், வி.எம். கோகுல், புலவர் சக்திவேல், சண்முகசுந்தரம் உள்ளிட்ட கவுன்சிலர்களும், சடையப்பன், மகளிர் அணி கோமதி, சுந்தரம்பாள் உள்ளிட்ட நிர்வாகிகளும், கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தீர்மானங்களை ரகுநாதன் வசித்தார். முடிவில் நல்லூர் இளைஞர் அணி கோபால் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment