Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Anonymous in    

ஓர் உறவு பதறுகிறது - சந்தோஷ்
வழிப்போக்கன் ஒருவன் 
விழிபிதுங்கி திகைத்து 
மொழியறியா தேசத்தில் 
திசைக்காட்டியை தேடுவதைப்போல 
மீசைமுளைத்த உன் குழந்தை 
நான் தவிக்கிறேனடி. 

ஏன் ஏன் என் செல்லமே 

உன் அன்புதேசத்திலிருந்து 
என்னை நீ 
தொலைத்துவிட 
துடியாய் துடிக்கிறாய். 

நீ விலகிப்போ என்கிறாய் 
கருகிப்போகிறது என்னிதயம். 

அன்பு அனலில் 
உருக்கி செதுக்கியது 
நம் உறவுச்சிற்பம். 

சிதைத்துவிடவா நினைக்கிறாய்? 
சிதைத்தால். சிதைவது 
நம் உறவுசிலை மட்டுமா? 
சற்று முன்வரையிலான 
உன் உயிருக்கு உயிரான 
உன் அண்ணனின் உயிரும்தான். 

0 comments: