Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Saturday, September 06, 2014

On Saturday, September 06, 2014 by Unknown in , ,    

Photo: தண்ணீர் குடிப்பவர்கள் பகிரலாம்...

தண்ணீர் வாழ்வின் கொடை!

- Bala Ji A. 
நீர்-இது வெறும் ஒரு திரவம் அல்ல.
நம் வாழ்க்கையின் ஓர் அங்கம்.
மழை வடிவில்
நமக்கு சந்தோஷத்தையும்…
நம் துக்கத்தின் போது கண்ணீராகவும்....

உருவகம் வேறாய் இருந்தாலும்
நீர் நம் வாழ்வின் ஓர் அங்கம்....
கடலுக்கு(நீருக்கு) அளப்பறிய ஆற்றல்
உண்டு
என அனைவரும் அறிந்திருப்போம்...
உண்மை தான்...

நம் கவலைகளை சுமந்து அதனிடம்
செல்கையில்
நம்மோடு விளையாடிவிட்டு
நம் கவலைகளை பெற்றுக்கொண்டு
நம்மை சந்தோஷமாக வழியனுப்புகிறதே.......

தண்ணீரை சேமிப்போம்.....
இயற்கையை காப்போம்.....

Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in ,    

முக்கோணக்காதல்

முக்கோணக்காதல்
ஒதுங்கி ஒதுங்கி போனது 
கடற்கரை.. 
ஓடி ஓடி வந்து சீண்டியது 
காதல் கொண்ட அலை.. 

அலையின் சீண்டலுக்கு 
அஞ்சிய கரையின் மேல் 
கவிஞன் கவிதை எழுதினான்.. 

அவன் விரல் தீண்டலின் மேல் 
கரைக்கு காதல்.. 
அலைக்கு அவன் மேல் பொறாமை.. 

கவிதைகளை ஓடிவந்து 
அழித்தது அலை.. 
சீண்டலை பொறுத்துக்கொண்டு 
மீண்டும் ஒரு தீண்டலுக்கு 
காத்திருந்தது கரை.. 

மீண்டும் தீண்டினான் 
மீண்டும் சீண்டியது 
மீண்டும் காத்திருந்தது.. 

மீண்டும் ஒரு தீண்டலில் 
கரை கேட்ட கேள்வி 
என் மீது இத்தனை காதலா 
கவிஞனுக்கு.. 

கவிஞன் தீண்டியதோ 
அலையின் சீண்டலுக்காகத்தான்.. 
அலை அழகை கண்டு மயங்கியே 
கரை கவிதைகள் இயற்றினனாம்.. 

மீண்டும் ஒரு சீண்டலில் 
அழிந்த கவிதை சுவடில் 
வழிந்தோடியது கடல் நீர்.. 
கரையின் கண்ணீராய்...
  • எழுதியவர் : மாடசாமி மனோஜ்
On Saturday, August 30, 2014 by Anonymous in    

ஓர் உறவு பதறுகிறது - சந்தோஷ்
வழிப்போக்கன் ஒருவன் 
விழிபிதுங்கி திகைத்து 
மொழியறியா தேசத்தில் 
திசைக்காட்டியை தேடுவதைப்போல 
மீசைமுளைத்த உன் குழந்தை 
நான் தவிக்கிறேனடி. 

ஏன் ஏன் என் செல்லமே 

உன் அன்புதேசத்திலிருந்து 
என்னை நீ 
தொலைத்துவிட 
துடியாய் துடிக்கிறாய். 

நீ விலகிப்போ என்கிறாய் 
கருகிப்போகிறது என்னிதயம். 

அன்பு அனலில் 
உருக்கி செதுக்கியது 
நம் உறவுச்சிற்பம். 

சிதைத்துவிடவா நினைக்கிறாய்? 
சிதைத்தால். சிதைவது 
நம் உறவுசிலை மட்டுமா? 
சற்று முன்வரையிலான 
உன் உயிருக்கு உயிரான 
உன் அண்ணனின் உயிரும்தான்.