Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in ,    

முக்கோணக்காதல்

முக்கோணக்காதல்
ஒதுங்கி ஒதுங்கி போனது 
கடற்கரை.. 
ஓடி ஓடி வந்து சீண்டியது 
காதல் கொண்ட அலை.. 

அலையின் சீண்டலுக்கு 
அஞ்சிய கரையின் மேல் 
கவிஞன் கவிதை எழுதினான்.. 

அவன் விரல் தீண்டலின் மேல் 
கரைக்கு காதல்.. 
அலைக்கு அவன் மேல் பொறாமை.. 

கவிதைகளை ஓடிவந்து 
அழித்தது அலை.. 
சீண்டலை பொறுத்துக்கொண்டு 
மீண்டும் ஒரு தீண்டலுக்கு 
காத்திருந்தது கரை.. 

மீண்டும் தீண்டினான் 
மீண்டும் சீண்டியது 
மீண்டும் காத்திருந்தது.. 

மீண்டும் ஒரு தீண்டலில் 
கரை கேட்ட கேள்வி 
என் மீது இத்தனை காதலா 
கவிஞனுக்கு.. 

கவிஞன் தீண்டியதோ 
அலையின் சீண்டலுக்காகத்தான்.. 
அலை அழகை கண்டு மயங்கியே 
கரை கவிதைகள் இயற்றினனாம்.. 

மீண்டும் ஒரு சீண்டலில் 
அழிந்த கவிதை சுவடில் 
வழிந்தோடியது கடல் நீர்.. 
கரையின் கண்ணீராய்...
  • எழுதியவர் : மாடசாமி மனோஜ்

0 comments: