Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in    
போனால் போகட்டும் போடா o0o  வழக்கு நடையில்
ராப் பகலா கண்முழிச்சி 
படிச்சதெல்லாம் வீணாச்சி 
பரிட்ச தோல்வி கண்டிடுச்சி 
போகட்டும் போடா - இனி 
அடுத்த பரிட்ச எப்போன்னு 
கேட்டுட்டு வாடா!! 

தொரத்தி தொரத்தி காதலிச்சி 
வெரட்டினது வெலகிடிச்சி 
காதல் தோல்வி கண்டிடுச்சி 
போகட்டும் போடா - இனி 
அழகு பொண்ணு தேடி வரும் 
கவல இல்லடா!! 

வரிசையில கால் வலிச்சி 
தேர்தலுல ஓட்டுப் போட்டா 
எதிர் கட்சி ஜெயிச்சிபுட்டான் 
போகட்டும் போடா - யாரும் 
பதவியின்னு அமர்ந்துபுட்டா 
நல்லவனும் கெட்டவனா மாறிடரான்டா!! 

வேலையைத்தான் தேடி திரிஞ்சி 
வேல கெடைக்கும் நேரத்துல 
பொண்ணு தட்டி பறிச்சி கிட்டா 
போகட்டும் போடா - இனி 
சொந்த தொழில் செஞ்சி 
நானும் பொழச்சிப்பேனடா!! 

சேத்து வெச்ச பணத்த எல்லாம் 
நோட்டம் பாத்து எடுதுப்புட்டான் 
சொல்லியழ தெய்வம் கூட காணலியே 
போகட்டும் போடா - காக்கும் 
தெய்வத்துக்கே காவல் வேணும் 
நானும் கதறி என்னடா??? 

இளமையத்தான் காக்க வேண்டி 
காலத்ததான் கட்டப் போனேன் 
முதுமையத்தான் தந்து போச்சு 
போகட்டும் போடா - காலம் 
தந்து போன அனுபவந்தான் 
என்ன கட்டிக் காக்கும்டா!! 

அடுத்தவன கெடுப்பவன்தா(ன்) 
நாட்டில் அதிகம் ஆச்சுதடா 
மோசமான உலகமாச்சு 
போகட்டும் போடா - அடுத்து 
கெடுப்பவனும் கெட்டழிவான் 
நான் கண்ட உண்மைதானடா ... 

சோதனைதான் வாழ்க்கையிலே 
வரும் போகும் நிற்பதில்லே 
அதுக்குப் போயி கலங்குவது 
அர்த்தமில்லடா - எதையும் 
நேர்மறையா எடுத்துகிட்டா 
துன்பம் ஏதடா??? 

எத்தனையோ துரோகி கண்டேன் 
எத்தனையோ துரோகம் கண்டேன் 
தன்னபிக்கை பிடி நழுவவில்லை 
வெற்றி வசமடா - நாளும் 
நேர்மையுடன் இருந்துவிட்டால் 
வெற்றியோடு வீர நடையும் தானடா... 
  • எழுதியவர் : சொ.சாந்தி



0 comments: