Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in ,    


வெள்ளக்கோவில், காமராஜபுரத்தில் வெள்ளிக்கிழமை இந்து, முஸ்லிம், கிருஸ்தவ சமயத்தினர் ஒன்றிணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடினர்.
இங்குள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் 15-ஆவது ஆண்டாக இப்பகுதி இளைஞரணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆலயத்தில் மஹா கணபதி ஹோமம், தீர்த்த அபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் செய்து அருகில் மத்தள விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் கரைக்கப்பட்டது.
இக்கோவிலுக்கு அருகில் உள்ள சர்ச், மசூதிக்கு வந்தவர்களும், இப்பகுதியில் குடியிருக்கும் நூற்றுக்கணக்கான முஸ்லிம், கிருஸ்தவ மதத்தினரும் இவ்விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு உதவிகள் செய்து, பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
உத்தமபாளையம், அகலரைப்பாளையம்புதூர், புதிய பேருந்து நிலையம், முத்தூர் உள்பட 29 இடங்களில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
இவைதவிர, எல்கேசி நகர், சேரன் நகர், வட்ட மலையார் தோட்டம், குமாரவலசு, மயில்ரங்கம், லக்கமநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு ஊர்களிலிருக்கும் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது.

0 comments: