Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in Movies
பல தடைகளை தாண்டி ரசிகர்களின் பேராதரவோடு இன்று வெளியாகியிருக்கிறது ஜிகர்தண்டா.
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்திச் சென்ற ‘பீட்சா’ பட இயக்குனரின் அடுத்த படைப்பு தான் இந்த ஜிகர்தண்டா.
மதுரை என்றாலே சமீப காலமாக வெட்டுக்குத்து என்று தான் வருகிறது, அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல, ஆனால் இதில் சித்தார்த் போன்ற சாக்லேட் ஹீரோவை இக்கதையில் கொண்டு வந்ததற்காகவே கார்த்திக் சுப்புராஜை பாராட்டலாம்.
படத்தின் கதையாக பார்த்தோமேயானால் குறும்படப் போட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் சித்தார்த் அங்கு நீதிபதியாக வரும் பிரபல இயக்குநரான நாசரால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார். ஆனால் இன்னொரு நீதிபதியான நரேனுக்கோ சித்தார்த்தின் படம் மிகவும் பிடித்துப் போய்விடுகின்றது.
இதனால் இரு இயக்குநர்களுக்குகிடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகின்றது. கோபத்தின் உச்சிக்கு செல்லும் நரேன் தானே சித்தார்த்தின் படத்தை தயாரிக்கப் போவதாக நிகழ்ச்சியில் பொதுவில் அறிவிப்பு செய்கின்றார்.
ஆனால் நரேனின் அலுவலகம் சென்ற சித்தார்த்திற்கோ அதிர்ச்சி காத்திருக்கிறது. காரணம் ஒரு ரவுடி கும்பல் பற்றிய கதையை தான் தயாரிப்பேன் என்று நரேன் சித்தார்த்திடம் கூறுகின்றார்.
தயாரிப்பாளர் கூறியது போல் ரவுடி கும்பல் பற்றிய வித்தியாசமான கதையை தேடி அலையும் சித்தார்த், மதுரையில் மிகப் பெரிய ரவுடியான சேதுவின் வாழ்க்கையை படமாக எடுக்க அவரை தேடி மதுரைக்கே செல்கிறார்.
ரவுடி சேது பற்றிய கதையை எவ்வாறு தெரிந்து கொள்கிறார். அந்த படத்தை இயக்கினாரா? அதில் யார் கதாநாயகனாக நடித்தது? என பல திருப்பங்களுடன் பின்பாதி கதை நகர்கின்றது.
படத்தின் பலமே திரைக்கதை தான், அதேபோல் பல டுவிஸ்ட்டுகள் அங்கே அங்கே இருப்பது ரசிக்கும் ரகம். சித்தார்த்தின் எதார்த்த நடிப்பு எல்லோரையும் ரசிக்க வைக்கிறது, அதையும் தாண்டி நம்மை கவர்வது சிம்ஹா தான்,வில்லத்தனமான சிரிப்பு, நடை உடை, பாவனை என அனைத்து அசைவிலும் ஒரு ரௌத்திரம் ஆடிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்
சந்தோஷ் நாராயணன் இசை மிகவும் வலு சேர்க்கிறது, குறிப்பாக பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஆரியின் ஒளிப்பதிவு நம்மை மதுரைக்கே அழைத்து செல்கிறது. குறிப்பாக இண்டர்வல் பிளாக் முன்னாடி வருகிற மழை காட்சியில் நம்மை பிரமிக்க வைக்கிறார்.
பலவீனம் என்று பார்த்தால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், இனி எத்தனை காலத்திற்கு தான் மதுரை என்றாலே அடிதடி என்று காட்டுவார்களோ!
இந்த படத்தின் முலம் தலை சிறந்த இயக்குனர்கள் வரிசைக்கு கார்த்திக் சுப்புராஜ் செல்ல ஆரம்பித்து விட்டார். முதல் பாதி வேறு மாதிரி காட்டிவிட்டு இரண்டாம் பாதியை எதிர்மறையாகவும் அமைக்கலாம் என்று பின் வரும் சந்ததிக்கு ஒரு விதை விதைத்துள்ளார் நம்ம கார்த்திக்.
உண்மையில் இந்த படத்தை ஏதோ தமிழில் க்வென்டின் டரான்டினோ இயக்கியது போலவே இருந்தது.
மொத்தத்தில் மதுரையின் ஜிகர்தண்டா எப்போதும் நம்மை ஏமாற்றுவதில்லை, செம்ம டேஸ்ட் மா !
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
