Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
நடிகை தமன்னா இந்திப்படம் என்டர்டெய்ன்மெண்டின் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட ராம்ப் வாக்கில் கலந்து கொண்டார்.

tamanna

 
இந்தியில் தமன்னா நடித்த ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் இரு படங்களும் தோல்வியை சந்தித்தன. அவர் நம்பியிருக்கும் ஒரே படம் என்டர்டெய்ன்மெண்ட். இந்த ஒரு படம்தான் அவரது கைவசம் உள்ளது. அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. 
 
தமிழ், தெலுங்கு போல் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இந்தியில் டபாய்க்க முடியாது. படத்தில் நாய்கள் பிரதானமாக வருகின்றன. அதனால் அக்ஷய், தமன்னா கலந்து கொண்ட ராம்ப் வாக் நிகழ்வில் நாய்களும் கலந்து கொண்டன. நாய்களுடன் ராம்ப வாக்கில் அக்ஷய்,  தமன்னா கலந்து கொண்டார்கள்.
 
ஆகஸ்ட் 8 படம் வெளியாகிறது.

tamanna

tamanna