Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts
Thursday, January 22, 2015
On Thursday, January 22, 2015 by Anonymous in News
சினிமா நடிகர், நடிகைகள் பலரும் சமூக இணையதளங்களில் தங்கள் பெயரில் பக்கம் ஒன்றை நிறுவி, அதில் தாங்கள் நடிக்கும் படங்கள் குறித்த தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
இது ஒரு பக்கம் நல்ல விஷயமாக தோன்றினாலும், மறுபுறம் ஆபத்தான விஷயங்களும் இதில் இருக்கிறது. சிலர் ஏதாவது ஒரு பிரபலத்தின் பெயருடன் போலியான கணக்குகளை தொடங்கி, அதன்மூலம் அவர்கள் பெயரை களங்கப்படுத்தும் விதமாக ஏதாவது செய்து கொண்டிருப்பர். இதற்காகவே பல நட்சத்திரங்களும் சமூக இணையதளங்களுக்குள் வர பயப்படுவார்கள்.
தற்போது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா பெயரில் பேஸ்புக்கில் பக்கம் ஒன்று திறக்கப்பட்டதாக செய்திகள் வந்தது. இது சூர்யாவின் பக்கம்தான் என்று எண்ணி பல்வேறு ரசிகர்களும் அந்த பக்கத்தை லைக் செய்தனர்.
ஆனால், இந்த பக்கம் போலியானது என்று அங்கீகரிக்கப்பட்ட சூர்யா ரசிகர் மன்றம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும், சூர்யா, இதுவரை சமூக வலைத்தளங்களான பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் இணையவில்லை என்றும், தற்போது பேஸ்புக்கில் சூர்யா பெயரில் பக்கம் வெளியானது போலியானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட பக்கத்தை தொடங்கியவர் மீது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
On Thursday, January 22, 2015 by Anonymous in News
விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடித்த ‘ஐ’ படம் பொங்கலன்று ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியானது.
பொங்கல் விடுமுறை தினங்களில் ‘ஐ’ படம் பார்க்க கூட்டம் அலை மோதியது. தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன. இந்த படம் உலகம் முழுவதும் முதல் ஒரு வாரத்தில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரமின் முந்தைய படங்கள் இதுபோன்று வசூல் சாதனை நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் ரிலீசான முதல் ஓரிரு தினங்களிலேயே ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ‘மனோகருடு’ என்ற பெயரில் அங்கு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தியில் இதுவரை ரூ.7 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது.
இந்த நிலையில் ‘ஐ’ படத்துக்கு எதிராக திருநங்கைகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை அவமதிப்பது போல், காட்சி மற்றும் வசனங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளதாக கண்டித்து இப்போராட்டத்தை நடத்துகின்றனர். சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி தணிக்கை குழுவிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், தணிக்கை குழு அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. திருநங்கைகள் போராட்டத்தை தொடர்ந்து படத்தின் இயக்குனர் ஷங்கர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
On Thursday, January 22, 2015 by Anonymous in News
‘ஐ’ படத்தில் 'திருநங்கைகளை' அவதூறாக சித்தரித்துள்ளதாக இயக்குனர் ஷங்கருக்கு எதிராக திருநங்கைகள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, இப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த ஓஜாஸ் ரஜானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திருநங்கை நண்பர்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள். ‘ஐ’ படத்தின் கதை ஒரு காதல் கதை. அந்த காதலை ஒரு திருநங்கை வெளிப்படுத்துவதான கதாபாத்திரம் என்னுடையது. மற்றபடி, யார் மனதையும் புண்படுத்தும் விதமாகவோ, யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டும் என்பதற்காகவோ எடுக்கப்படவில்லை. என்னுடைய கதாபாத்திரத்தை ஷங்கர் ரொம்பவும் அழகாக படமாக்கியிருந்தார்.
நான் தற்போது இந்தியாவில் இல்லை. படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருக்கிறேன். ஆகையால், இந்த அறிக்கையை என்னுடைய வேண்டுகோளாக ஏற்று, ‘ஐ’ படத்தின் மீது எந்த கோபமும் வேண்டாம், வெற்றியை மட்டும் கொண்டாடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
On Thursday, January 22, 2015 by Anonymous in News
ரஜினி, விஜய், அஜீத், சிம்பு என முன்னணி கதாநாயகர்களுடன் காமெடி வேடங்களில் நடித்த சந்தானம், கதாநாயகனாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தாலும், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ அவருக்கு தனி ஹீரோ அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.
இப்படத்திற்கு பிறகு அவர் ஹீரோவாகத்தான் நடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்தது. இருந்தாலும், அதன்பிறகு ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ராஜேஷ் இயக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
ராஜேஷ்-சந்தானம் கூட்டணியில் ஏற்கெனவே 4 படங்கள் வெற்றியடைந்ததால் இந்த படத்திலும் அந்த கூட்டணி இணைந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் கொடுத்திருப்பதால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக தாமிரபரணி பானு நடிக்கிறார்.
இப்படத்திற்கு பிறகு காமெடி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து முழுநேர கதாநாயகனாக நடிக்க திட்டமிட்டுள்ளாராம் சந்தானம். இவர் தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அஷ்னா சவேரி, அகிலா கிஷோர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளார்களாம்.
On Thursday, January 22, 2015 by Anonymous in News
1000 படங்களுக்கு இசையமைத்த இளைய ராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா நடந்தது. பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’ படம் 1000–வது படம் ஆகும்.
இதற்கான பாராட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இதில் அமிதாப் பச்சன், ரஜினி, கமலஹாசன், ஸ்ரீதேவியும், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய், போனிகபூர், தனுஷ், அக்ஷரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ரஜினி பேசும் போது, இளையராஜாவை 1970–ல் இருந்தே தெரியும். அப்போது குறும்புக்காரராக இருந்தார். இப்போது அவரிடம் பெரிய மாற்றம். ஆடையிலும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அவரை ராஜா சாமி என்றே அழைக்கிறேன். மகான் போல் ஆகிவிட்டார் என்றார்
1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா நடந்தது. 1976–ல் ‘அன்னக்கிளி’ படத்தில் அறிமுகமான இளையராஜா 40 ஆண்டுகளாக இசை துறையில் சாதனை படைத்து வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.
பாலா இயக்கும் 'தாரை தப்பட்டை' படம் இளையராஜாவின் 1000–வது படம் ஆகும். இந்தியில் அமிதாப்பச்சன், தனுஷ், கமல் மகள் அக்ஷரா நடிக்கும் 'ஷமிதாப்' படத்துக்கும் தற்போது இசையமைக்கிறார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று இரவு மும்பையில் நடந்தது. இந்த விழாவை 1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாக படக்குழுவினர் நடத்தினர். இதில் அமிதாப்பச்சன் பங்கேற்று இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
நடிகர்கள் ரஜினி, கமலஹாசன் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கினர். திரையுலகில் மூன்று ஜாம்பவான்களும் மேடைக்கு சென்று இளையராஜாவை பாராட்டியது கூட்டத்தினரை கரகோஷம் எழுப்ப வைத்தது.
முன்னாள் கனவு கன்னி ஸ்ரீதேவியும் இதில் பங்கேற்றார். 'ஷமிதாப்' படத்தில் இளையராஜா இசையில் அமிதாப்பச்சன் ஒரு பாடலை பாடி உள்ளார். அந்த பாடலை மேடையில் அவர் பாடினார். ஏற்கனவே ரஜினி, கமலும் நிறைய படங்களில் இளையராஜா இசையில் பாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகர் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், போனிகபூர் போன்றோரும் இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர். தனுஷ், அக்ஷரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமிதாப்பச்சன் கூறும் போது, இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த மேடை. ஒவ்வொரு படத்துக்கும் 5 பாடல்கள் என ஐந்தாயிரம் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அவற்றில் 3,500 பாடல்களுக்கு மேல் ஹிட்டாகியுள்ளது. இளைய ராஜாவின் சாதனையை தொடுவது கடினமானது. இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வைத்து இருக்கிறார் என்றார்.

தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகின்றனர். இவர்கள் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் வெற்றி பெறுவதால் இவர்களைத் தேடி வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில், ‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஆப் தமிழா ஆதியும் ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகம் ஆக இருக்கிறார். சமீபத்தில் நடந்த ‘ஆம்பள’ வெற்றிவிழா கொண்டாட்டத்தில் இதை சுந்தர்.சி வெளிப்படுத்தினார்.
அவர் கூறும்போது, ‘ஆம்பள’ படத்தின் வெற்றிக்கு ஆதியின் இசையும் ஒரு முக்கிய காரணம். இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. விரைவில் என்னுடைய சொந்த பேனரில் அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
ஹிப் ஆப் தமிழா ஆதி இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு, பல்வேறு ஆல்பங்களில் பாடி, நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
On Thursday, January 22, 2015 by Anonymous in News
தமிழ் சினிமாவுக்கு வந்த புதிதில் ஹன்சிகாவை எல்லோரும் ‘சின்ன குஷ்பூ’ என்று அழைத்து வந்தனர். கொழுக் மொழுக்கென்று இருந்த அவரது தேகத்தை வைத்து எல்லோரும் அப்படி அழைத்தார்கள்.
தற்போது, விஜய்க்கு ஜோடியாக ‘புலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகாவை விஜய் செல்லமாக இளவரசி என்று அழைத்து வருகிறாராம். இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது,
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய்தான். அவர் எப்போதும் என்னை செல்லமாக ஹன்சு என்றுதான் செல்லமாக அழைப்பார். ஆனால், இப்போது என்னை இளவரசி என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்.
உங்களுக்கு அது ஏன் என்று தெரிகிறதா? ஆம். நான் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் ‘புலி’ படத்தில் இளவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். அதனால்தான், விஜய் என்னை இளவரசி என்று அழைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இப்படத்தில் ஹன்சிகாவுடன், ஸ்ருதிஹாசனும் இன்னொரு நாயகியாக நடித்து வருகிறார். மேலும், ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சிம்பு தேவன் இயக்கிவருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
On Thursday, January 22, 2015 by Anonymous in News
விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஐ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இப்படத்தில் விக்ரம் மூன்றுவிதமான கெட்டப்புகளில் வந்து அசத்தினார். குறிப்பாக, கூனன் கதாபாத்திரத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமம் அனைவருக்கும் தெரிந்ததே.
இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு விக்ரமை மகிழ்ச்சியை ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ‘ஐ’ படத்திற்காக வாங்கிய சம்பளத்திலிருந்து பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானமாக கொடுத்துள்ளாராம் விக்ரம்.
இப்படத்தை தொடர்ந்து விக்ரம் விஜய் மில்டன் இயக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
நடிகை தமன்னா இந்திப்படம் என்டர்டெய்ன்மெண்டின் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட ராம்ப் வாக்கில் கலந்து கொண்டார்.
இந்தியில் தமன்னா நடித்த ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் இரு படங்களும் தோல்வியை சந்தித்தன. அவர் நம்பியிருக்கும் ஒரே படம் என்டர்டெய்ன்மெண்ட். இந்த ஒரு படம்தான் அவரது கைவசம் உள்ளது. அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு போல் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இந்தியில் டபாய்க்க முடியாது. படத்தில் நாய்கள் பிரதானமாக வருகின்றன. அதனால் அக்ஷய், தமன்னா கலந்து கொண்ட ராம்ப் வாக் நிகழ்வில் நாய்களும் கலந்து கொண்டன. நாய்களுடன் ராம்ப வாக்கில் அக்ஷய், தமன்னா கலந்து கொண்டார்கள்.
ஆகஸ்ட் 8 படம் வெளியாகிறது.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
கடல் படத்துக்குப் பிறகு கௌதம் கார்த்திக் நடிக்க ஆரம்பித்த படம் சிப்பாய். சிலம்பாட்டம் சரவணனின் இரண்டாவது படம்.
லட்சுமி மேனன் நாயகியாக நடித்துள்ள இப்படம் எப்போதோ திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் வரவில்லை. பெட்டிக்குள் முடங்கியுள்ள இது எப்போது வெளியாகும் என்றும் தெரியவில்லை.
சிப்பாய்க்கு ஏனிந்த பதுங்குக்குழி நிலைமை?
சிப்பாய் படத்தின் கதை சட்டக்கல்லூரி கலவரத்தை பின்னணியாகக் கொண்டது என கூறப்படுகிறது. இதே பின்னணியில் தயாரான படம்தான் விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி.
விக்ரம் பிரபுவின் படம் முந்திக் கொண்டதால் அதன் கதை ரசிகர்களின் மனதிலிருந்து மாயட்டும் என்று சிப்பாய் காத்திருப்பதாக கூறுகிறார்கள்.
உண்மையா சரவணன் சார்...?

வெளிநாடுகளில் வேலையில்லா பட்டதாரி போலவே ஜிகிர்தண்டாவும் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. முக்கியமாக யுஎஸ்ஸில் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
யுஎஸ்ஸில் முதல்வார இறுதியில் 20 திரையிடல்களில் 71.91 லட்சங்களை ஜிகிர்தண்டா வசூலித்துள்ளது. இங்கு வேலையில்லா பட்டதாரி தனது இரண்டாவது வார இறுதியில் ஐந்து திரையிடல்களில் 2,748 டாலர்களை தனதாக்கியுள்ளது. இதுவரையான இதன் யுஎஸ் வசூல் ரூபாயில் 1.36 கோடி.
யுகே மற்றும் அயர்லாந்தில் வேலையில்லா பட்டதாரி சென்ற வார இறுதியில் மூன்று திரையிடல்களில் 7,083 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரை அதன் யுகே மற்றும் அயர்லாந்த் வசூல் 91,035 பவுண்ட்கள். நமது ரூபாயில் 93.54 லட்சங்கள்.
ஜிகிர்தண்டா இங்கு முதல்வார இறுதியில் இரண்டு திரையிடல்களில் 6.07 லட்சங்களை வசூலித்துள்ளது.
ஆஸ்ட்ரேலியாவில் ஜிகிர்தண்டா முதல்வார இறுதியில் ஐந்து திரையிடல்களில் 12.86 லட்சங்களையும், வேலையில்லா பட்டதாரி இரண்டு திரையிடல்களில் 375 ஆஸ்ட்ரேலிய டாலர்களையும் வசூலித்துள்ளது. வேலையில்லா பட்டதாரியின் இதுவரையான வசூல் சுமார் 37.35 லட்சங்கள்.
மலேசியாவில் சென்ற ஞாயிறுவரை ஜிகிர்தண்டாவின் ஓபனிங் வசூல் 5.03 லட்சங்கள். வேலையில்லா பட்டதாரியின் வசூல் 2.14 கோடிகள்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் ஜெயராம் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ் படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் சென்னையில் தொடங்கி சில தினங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சூர்யாவுடன் நயன்தாரா, எமி ஜாக்சன் இதில் நடிக்கின்றனர். இந்த வாரம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது.
மாஸில் புதிதாக ஜெயராம் கமிட்டாகியுள்ளார். இவர் ஏற்கனவே வெங்கட்பிரபுவின் சரோஜா படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மாஸில் அதற்கு முற்றிலும் மாறுபட்ட வேடம் என படயூனிட் கூறுகிறது.
மாஸுக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
பூஜை படத்தை ஆரம்பிக்கும் போதே படத்தின் கதை கோயம்புத்தூரில் தொடங்கி பீகாரில் முடியும் என கூறியிருந்தார் ஹரி. விரைவில் பீகாரில் படத்தின் கிளைமாக்ஸை படமாக்க உள்ளனர்.
ஹரி தனது வழக்கமான வேகத்துடன் படத்தின் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளார். கிளைமாக்ஸ் மற்றும் சில பாடல் காட்சிகள் மட்டுமே இனி படமாக்கப்பட வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டபடி பீகாரில் படத்தின் கிளைமாக்ஸை படமாக்குகின்றனர். அதிபயங்கர சண்டைக் காட்சியை அங்கு ஷுட் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
விஷால், ஸ்ருதி நடிக்கும் இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் சில இன்னும் எடுக்கப்பட வேண்டும். கிளைமாக்ஸ் படமாக்கப்பட்டதும் பாடல் காட்சிக்காக சுவிஸ் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தங்கர்பச்சான் தமிழ் சினிமாவை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவரது களவாடிய பொழுதுகள் படம் இன்னும் வெளியாகாமலே உள்ளது. பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள இப்படம் கத்தியால் விமோசனம் பெற்றுள்ளது.
கத்தி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐங்கரன் கருணாதான் களவாடிய பொழுதுகளை தயாரித்தார். விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டாததால் அவரும் படத்தை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் ஐங்கரனின் கத்தி வெளியாகவிருக்கும் நிலையில் அதற்கு முன் களவாடிய பொழுதுகளை வெளியிட திட்டமிட்டுள்ளனர். களவாடிய பொழுதுகளை வாங்குகிறவர்களுக்கே கத்தி என்பது டீல். கத்தி லாபத்தை சம்பாதிக்கும் என்பதால் களவாடிய பொழுதுகள் சின்ன சேதாரத்தை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை என்று விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் டீலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்களாம்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்பட விழாக்களை நடத்திக் கொண்டேயிருக்கும். மாதத்துக்கு ஒரு நிகழ்வேனும் இவர்கள் சார்பில் சென்னையில் நடத்தப்படும்.
இந்த மாதம் 11 ஆம் தேதியிலிருந்து 16 ஆம் தேதி வரை கொரிய திரைப்பட விழாவை நடத்துகின்றனர். டெல்லியில் உள்ள கொரிய கலாச்சார மையத்துடன் இணைந்து இந்த விழாவை சென்னையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடத்துகின்றனர். விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் கொரிய தூதர் கலந்து கொள்கிறார்.
மேலும் தகவல்களுக்கு சென்னை பார்சன் காம்ப்ளக்ஸில் இயங்கும் இந்தோ சினி அப்ரிசேஷன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கவில்லை. முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடல் படத்துக்குப் பிறகு மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அரவிந்த்சாமி. அவர் கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகி அதனை அவர் மறுத்தது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவனில் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. அவர் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார், ஆனால் வில்லன் கிடையாது என படத்தை இயக்கும் ஜெயம் ராஜா கூறியுள்ளார். இந்தப் படத்தில் வம்சி கிருஷ்ணாதான் வில்லனாக நடிக்கிறார்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
ரஜினியுடன் நடிப்பவர்கள் அவரைப் பற்றி வியந்து பேட்டியளிப்பது சாதாரணமாக நடக்கக் கூடியது. சோனாக்ஷி சின்கா ஒருபடி மேல். ரஜினியுடன் நடித்ததையும், அதனால் தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தையும் உணர்ச்சியுடன் மும்பையில் பேட்டியளித்துள்ளார். அது பற்றிய ஒரு தொகுப்பு இங்கே.
சல்மான் கான், அக்ஷய் குமார், அஜய் தேவ் கான், ஷாகித் கபூருடன் சோனாக்ஷி நடித்துள்ளார். அப்போதெல்லாம் தெரியாத பல விஷயங்களை ரஜினியுடன் நடித்த போது தெரிந்து கொண்டதாகவும், அவர் ஒரு மகானைப் போன்றவர் எனவும் சோனாக்ஷி பேட்டியில் கூறியுள்ளார்.
"வாழ்க்கையில் சில மகான்களால் நம்மையறியாமல் நமக்குள் சில மாற்றங்கள் ஏற்படும். அப்படியொரு மாற்றத்தை ரஜினியுடன் நடித்த போது எனக்குள் அனுபவப்பட்டேன்.
ரஜினியுடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் விலைமதிப்பற்றவை. படிப்படியாக முன்னேறி உயரத்துக்கு சென்றுவிட்ட மகான் அவர். என்னிடம் அவர் தனது அனுபவங்களைச் சொன்னார். அதன் மூலம் எனக்குள்ளும் ஆன்மீகம் சம்பந்தமான பக்தி விதையை அவர் விதைத்துவிட்டார். கேமராவுக்கு முன்னால் உள்ள ரஜினியும், அதற்குப் பின்னே உள்ள ரஜினியும் வேறு வேறானவர்கள். அவரால் நான் மாறிவிட்டேன்" என சோனாக்ஷி சின்கா பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சோனாக்ஷி சின்கா லிங்கா படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாள் அன்று இந்தப் படம் திரைக்கு வருகிறது.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
வெங்கட்பிரபுவின் மாஸ் படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமாரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
யாவரும் நலம் படத்துக்குப் பிறகு தெலுங்குக்கு சென்ற விக்ரம் குமார் அங்கு சில படங்களை இயக்கினார். அனைத்தும் ஹிட். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு மனம் படம் அனைவராலும் பாராட்டப்பட்டதுடன் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.
இதையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதனை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. 2டி என்டர்டெய்ன்மெண்டின் இரண்டாவது தயாரிப்பு இது. பாண்டிராஜ் இயக்கும் குழந்தைகள் சம்பந்தமான படத்தை சூர்யா ஏற்கனவே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
சிம்பு, நயன்தாரா இணைந்து நடித்து வரும் இது நம்ம ஆளு படத்தின் தலைப்புக்கு பெண்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சிம்பு சினி ஆர்ஸ்ட் தயாரிக்க பாண்டிராஜ் எழுதி இயக்கிவரும் படம் இது நம்ம ஆளு. முன்னாள் காதலர்களான சிம்பு, நயன்தாரா இணைந்து நடிப்பதாக அறிவித்ததுமே படத்தின் ஸ்டார் மதிப்புடன் சந்தை மதிப்பும் கூடியது. இந்தப் படத்துக்கு 1988 -ல் வெளியான பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்தின் பெயரை வைத்தனர்.
இது என்பது அஃறிணையை குறிக்கும் சொல். அதனை எப்படி பெண்ணை குறிக்க பயன்படுத்தலாம் என்று பொழுதுபோகாத சில பெண் அமைப்புகள் முண்டா தட்டியுள்ளன. படம் வெளியாகும் போது பெயரை மாற்றச் சொல்லி போராட்டம் நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இது நம்ம ஆளு என்று நயன்தாரா சிம்புவை கூறுவதாக இருந்தால்...? பெயரில் வரும் ஆளு நயன்தாராவாகதான் இருக்க வேண்டும் என்றில்லையே.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
எந்த கதாநாயகியையும் உங்களுக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டால் ஒரே பதில் ஆர்யா தான். அந்த அளவிற்கு எல்லோருடனும் நட்பாக பழகக்கூடியவர்.
ஆனால் சமீப காலமாக இவருக்கு என்ன ஆனது? என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில் எந்த கதாநாயகியிடம் முன்பு போல் பேசுவதில்லையாம். இந்த விஷயத்தில் தன் பெயர் அதிக டேமேஜ் ஆவதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதற்கு உதாரணமாக சமீபத்தில் தான் நடிக்கும் படத்தின் இயக்குனர் ஹீரோயினுக்கு நயன்தாரா பெயரை சொல்ல, அவர் மட்டும் வேண்டாம், வேறு யாராக இருந்தாலும் ஓகே என்று சொல்லி அதிர்ச்சி தந்தாராம்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக-கேரள எல்லையில் உள்ள உடுமலை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளனரா என க்யூ பிரிவு போலீஸார், வனத் துறையினர் தீவிர விசாரணை...
-
Thousands of Staff and students of NIT-T paid rich floral tributes to the former president of India, Dr. APJ Abdul Kalam at a program organ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருப்பூர் அருகே, செட்டிபாளையம் பகுதியில் வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்கியதில் திமுக பிரமுகர், அவரது மனைவி, மகன் கொலை செய்யப்ப...
-
தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பெங்களூர் வந்தார். அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்த...
-
பெருமாநல்லூர் ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை(ஜனவரி 23) நடைபெற உள்ளது. பெருமாநல்லூர் ஸ்ரீமகாளியம்மன் கோயில் கும்ப...