Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
வெளிநாடுகளில் வேலையில்லா பட்டதாரி போலவே ஜிகிர்தண்டாவும் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. முக்கியமாக யுஎஸ்ஸில் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

jigarthandaவெளிநாடுகளில் ஜிகிர்தண்டா, வேலையில்லா பட்டதாரி வசூல் நிலவரம்
யுஎஸ்ஸில் முதல்வார இறுதியில் 20 திரையிடல்களில் 71.91 லட்சங்களை ஜிகிர்தண்டா வசூலித்துள்ளது. இங்கு வேலையில்லா பட்டதாரி தனது இரண்டாவது வார இறுதியில் ஐந்து திரையிடல்களில் 2,748 டாலர்களை தனதாக்கியுள்ளது. இதுவரையான இதன் யுஎஸ் வசூல் ரூபாயில் 1.36 கோடி.
யுகே மற்றும் அயர்லாந்தில் வேலையில்லா பட்டதாரி சென்ற வார இறுதியில் மூன்று திரையிடல்களில் 7,083 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரை அதன் யுகே மற்றும் அயர்லாந்த் வசூல் 91,035 பவுண்ட்கள். நமது ரூபாயில் 93.54 லட்சங்கள். 
ஜிகிர்தண்டா இங்கு முதல்வார இறுதியில் இரண்டு திரையிடல்களில் 6.07 லட்சங்களை வசூலித்துள்ளது.
ஆஸ்ட்ரேலியாவில் ஜிகிர்தண்டா முதல்வார இறுதியில் ஐந்து திரையிடல்களில் 12.86 லட்சங்களையும், வேலையில்லா பட்டதாரி இரண்டு திரையிடல்களில் 375 ஆஸ்ட்ரேலிய டாலர்களையும் வசூலித்துள்ளது. வேலையில்லா பட்டதாரியின் இதுவரையான வசூல் சுமார் 37.35 லட்சங்கள்.
மலேசியாவில் சென்ற ஞாயிறுவரை ஜிகிர்தண்டாவின் ஓபனிங் வசூல் 5.03 லட்சங்கள். வேலையில்லா பட்டதாரியின் வசூல் 2.14 கோடிகள்.

வெளிநாடுகளில் ஜிகிர்தண்டா, வேலையில்லா பட்டதாரி வசூல் நிலவரம்