Thursday, January 22, 2015

On Thursday, January 22, 2015 by Anonymous in    




சினிமா நடிகர், நடிகைகள் பலரும் சமூக இணையதளங்களில் தங்கள் பெயரில் பக்கம் ஒன்றை நிறுவி, அதில் தாங்கள் நடிக்கும் படங்கள் குறித்த தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். 

இது ஒரு பக்கம் நல்ல விஷயமாக தோன்றினாலும், மறுபுறம் ஆபத்தான விஷயங்களும் இதில் இருக்கிறது. சிலர் ஏதாவது ஒரு பிரபலத்தின் பெயருடன் போலியான கணக்குகளை தொடங்கி, அதன்மூலம் அவர்கள் பெயரை களங்கப்படுத்தும் விதமாக ஏதாவது செய்து கொண்டிருப்பர். இதற்காகவே பல நட்சத்திரங்களும் சமூக இணையதளங்களுக்குள் வர பயப்படுவார்கள். 

தற்போது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா பெயரில் பேஸ்புக்கில் பக்கம் ஒன்று திறக்கப்பட்டதாக செய்திகள் வந்தது. இது சூர்யாவின் பக்கம்தான் என்று எண்ணி பல்வேறு ரசிகர்களும் அந்த பக்கத்தை லைக் செய்தனர். 

ஆனால், இந்த பக்கம் போலியானது என்று அங்கீகரிக்கப்பட்ட சூர்யா ரசிகர் மன்றம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும், சூர்யா, இதுவரை சமூக வலைத்தளங்களான பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் இணையவில்லை என்றும், தற்போது பேஸ்புக்கில் சூர்யா பெயரில் பக்கம் வெளியானது போலியானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட பக்கத்தை தொடங்கியவர் மீது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

0 comments: