Thursday, January 22, 2015

On Thursday, January 22, 2015 by Unknown in ,    
பின்னலாடை வர்த்தகத்தின் தற்போதைய நிலை குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின்(சி.ஐ.ஐ) திருப்பூர் மாவட்ட பிரிவு ஆய்வுப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சி.ஐ.ஐ. திருப்பூர் மாவட்டத் தலைவர் ராஜா எம்.சண்முகம் புதன்கிழமை கூறியது:
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ), ஸ்ரீபுரம் அறக்கட்டளை இணைந்து 2020-ஆம் ஆண்டுக்குள் திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகத்தை ரூ.ஒரு லட்சம் கோடி மதிப்புக்கு உயர்த்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதை செயல்படுத்த பல்வேறு முயற்சி
எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடக்கமாக, கிராண்ட் தார்ண்டன் என்ற நிறுவனம் மூலமாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கு முதற்கட்டமாக, இணையதளத்தில் 50-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கிராண்ட் தார்ண்டன் நிறுவன மேலாளர்கள் மையாங்அகர்வால், துசார்சர்மா ஆகியோர் அடங்கிய குழு திருப்பூரில் முகாமிட்டு கடந்த சில நாள்களாக நூற்பாலைகள் முதல் நிட்டிங், டையிங், காம்பேக்டிங், உள்நாட்டு பின்னலாடை நிறுவனங்கள, ஏற்றுமதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.
திட்ட அறிக்கை தயாரிக்கும் அந்நிறுவனத்தின் இயக்குநர் பத்மானந்த், திருப்பூரிலுள்ள அனைத்து சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளுடன் வியாழக்கிழமை (ஜனவரி 22) நேரடியாகத் தொடர்பு கொண்டு ஆலோசனையை பெற உள்ளார்.
இதனடிப்படையில், திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தின் நிலை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்குக் சமர்ப்பிக்கப்படும் என்றார் 

0 comments: