Thursday, January 22, 2015

On Thursday, January 22, 2015 by Unknown in ,    
காங்கயம் அருகே, எதுவும் எழுதப்படாத நிலையில் மைல் கல் காட்சி அளிக்கிறது.
காங்கயம்-தாராபுரம் நெடுஞ்சாலையில், வட்டமலை கிராமத்துக்கு முன்பாக உள்ள மைல் கல்லில் ஊர் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதில், வட்டமலை என்ற பெயர் எழுத்துச் சீர்திருந்தத்துக்கு முன்பிருந்த எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஒரு ஆண்டுக்கு முன், தினமணியில் சுட்டிக்கப்பட்டது. உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர், அந்த மைல் கல் மீது வெள்ளை நிறத்தைப் பூசி, எழுத்துக்களை அழித்தனர். இந்நிலையில், கடந்த ஓரு ஆண்டுக்கும் மேலாக அந்த மைல் கல் ஏதும் எழுதப்படாத நிலையில் காட்சி தருகிறது

0 comments: