Thursday, January 22, 2015

On Thursday, January 22, 2015 by Unknown in ,    
பெருமாநல்லூர் ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வெள்ளிக்கிழமை(ஜனவரி 23) நடைபெற உள்ளது.
பெருமாநல்லூர் ஸ்ரீமகாளியம்மன் கோயில் கும்பாபிஷக விழாவையொட்டி, பக்தர்கள்
புதன்கிழமை கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் இருந்து தீர்த்தக் குடங்களுடன்
ஊர்வலமாகப் புறப்பட்டு மாகாளியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். முன்னதாக இந்த ஊர்வலத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தொடங்கி வைத்தார்.
வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஸ்ரீமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
நடைபெற உள்ளது. இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதில், திருப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.சாமிநாதன், பெருமாநல்லூர் ஊராட்சித் தலைவர் நந்து வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

0 comments: