Thursday, January 22, 2015

On Thursday, January 22, 2015 by Unknown in ,    



Share on facebookShare on twitterMore Sharing Services
வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் தளத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 

 
உலகம் முழுவதிலும் பலகோடி வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் என்ற தகவல் பரிமாறிக்கொள்ளும் அப்ளிகேஷனை பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் போனில் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த அப்ளிகேஷனை தற்போது இணையத் தளத்திலும் பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இது குறித்து நேற்று வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், மொபைலில் பயன்படுத்தப்படுத்தி வரப்பட்ட வாட்ஸ் அப் சேவையை இனி இணையதளத்திலும் பயன்படுத்தலாம். இந்த புதிய சேவையை உங்கள் கணினியில் நிறுவிய பின்னர், க்யூ ஆர் கோட்-ஐ (QR Code) ஸ்கேன் செய்து பயண்படுத்திக் கொள்ளலாம்.
 
ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் (IOS) அப்ளிகேஷன் பயன்படுத்தும் தொலைபேசி வாடிக்கையாளர்கள், இந்த வசதியை தற்போது பயன்படுத்த முடியாது. இதனால் வாட்ஸ் அப்-இல் உள்ள உரையாடல்களும் குறுஞ்செய்திகளும் இனி எப்போதும் போனில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments: