Thursday, January 22, 2015

On Thursday, January 22, 2015 by Anonymous in    
ஹீரோவாக அவதாரம் எடுக்கும் ஹிப் ஆப் தமிழா ஆதி

தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகின்றனர். இவர்கள் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் வெற்றி பெறுவதால் இவர்களைத் தேடி வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

இந்நிலையில், ‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஆப் தமிழா ஆதியும் ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகம் ஆக இருக்கிறார். சமீபத்தில் நடந்த ‘ஆம்பள’ வெற்றிவிழா கொண்டாட்டத்தில் இதை சுந்தர்.சி வெளிப்படுத்தினார். 

அவர் கூறும்போது, ‘ஆம்பள’ படத்தின் வெற்றிக்கு ஆதியின் இசையும் ஒரு முக்கிய காரணம். இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. விரைவில் என்னுடைய சொந்த பேனரில் அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நம்புகிறேன் என்று கூறினார். 

ஹிப் ஆப் தமிழா ஆதி இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு, பல்வேறு ஆல்பங்களில் பாடி, நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: