Thursday, January 22, 2015

On Thursday, January 22, 2015 by Anonymous in    
மீண்டும் கதாநாயகனாக நடிக்க விரும்பும் சந்தானம்

ரஜினி, விஜய், அஜீத், சிம்பு என முன்னணி கதாநாயகர்களுடன் காமெடி வேடங்களில் நடித்த சந்தானம், கதாநாயகனாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தாலும், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ அவருக்கு தனி ஹீரோ அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. 

இப்படத்திற்கு பிறகு அவர் ஹீரோவாகத்தான் நடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்தது. இருந்தாலும், அதன்பிறகு ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ராஜேஷ் இயக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

ராஜேஷ்-சந்தானம் கூட்டணியில் ஏற்கெனவே 4 படங்கள் வெற்றியடைந்ததால் இந்த படத்திலும் அந்த கூட்டணி இணைந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் கொடுத்திருப்பதால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக தாமிரபரணி பானு நடிக்கிறார். 

இப்படத்திற்கு பிறகு காமெடி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து முழுநேர கதாநாயகனாக நடிக்க திட்டமிட்டுள்ளாராம் சந்தானம். இவர் தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அஷ்னா சவேரி, அகிலா கிஷோர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளார்களாம்.

0 comments: